பதறல் Jeffersonville, Indiana, USA 63-0901E 1நாம் நின்ற வண்ணமாகவே தலைவணங்குவோம். கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் விசுவாசிக்க மாத்திரம் செய்கிறோம். விசுவாசித்தால் மாத்திரம் போதுமென்று நீர் எங்களுக்குச் சொல்லியிருக்கிறீர். நாங்கள் இப்போது விசுவாசிக்கிறோம். எங்கள் விசுவாசத்தை நங்கூரமிடும் காரியங்களை நாங்கள் ஏற்கெனவே கண்டும் கேட்டும் இருக்கிறோம். அதற்காக உமக்கு நன்றியையும் துதியையும் செலுத்துகிறோம். தேவைப்பட்டவர்களுக்கு ஊழியம் செய்ய வேறொரு தருணத்தை நீர் அளித்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தேவனே, நீர் வாக்களித்துள்ளபடி, இன்றிரவு எங்கள் தேவைகளைச் சந்திக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 2உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் சுவிசேஷத்துடன் மறுபடியும் இந்த கூடாரத்திற்கு இன்றிரவு வரக் கிடைத்த சிலாக்கியத்திற்காக நாங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம். நான் வரச் சற்று தாமதமாகிவிட்டது. நான் உடனடியாக ஜெபிக்க வேண்டிய கேஸ் (case) ஒன்று மிஷிகனிலிருந்து வந்திருந்தது. ஆண்டவர் அப்பொழுது எங்களுக்காக ஒரு அற்புத செயல் புரிந்தார். அவருக்கு எல்லாம் தெரியும்... அவருக்கு யாரும் எதுவும் கூற வேண்டிய அவசியமில்லை. என்ன செய்ய வேண்டுமென்று அவருக்கு நன்றாகத் தெரியும். எனவே, நாங்கள் அவருக்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நாள் முழுவதும் அவர்கள் மிஷிகனிலிருந்து பயணம் செய்து இங்கு அடைந்தனர். அதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். மறந்து போகவேண்டாம்... (சகோ. பிரான்ஹாம், சகோ. நெவிலுடன் பேசுகின்றார் - ஆசி ) வரப்போகும் வாரத்தில் நடக்கவிருக்கும் கூட்டங்களைக் குறித்து மறந்து போக வேண்டாம் - புதனன்று இரவும், அடுத்த ஞாயிறன்று காலையும் மாலையும். நீங்கள் அக்கம் பக்கத்தில் இருந்தால் - நீங்கள் கூட்டங்களுக்கு வருவதைக் குறித்து அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். நான் பயணப்பட்டு வேறு இடங்களுக்குச் செல்லவிருக்கிறேன். எனக்காக ஜெபியுங்கள். வெகு விரைவில் திரும்பி வருவேன் என்று எதிர்ப்பார்க்கிறேன். 3உங்களுடைய தயைக்காக உங்களுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன் - நீங்கள் எனக்கு செய்துள்ளதை நினைவு கூருகிறேன். ஜார்ஜியாவிலுள்ள ஒரு சிறு சபையைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் ஒரு சூட் (Suit) துணியை இப்பொழுது அனுப்பி வைத்திருக்கிறார். அது மிகவும் அருமையான ஒரு செயல். சென்ற வாரத்தில், விடு முறையின் போது நான் கென்டக்கியில் இருந்தேன். அங்குள்ள மக்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். கர்த்தர் அங்கு நிகழ்த்தின மகத்தான அற்புதங்களை நாங்கள் கண்டோம். அவர் செய்த எல்லாவற்றிற்காகவும் நான் நன்றி செலுத்த விரும்புகிறேன். 4மறுபடியும் உங்களை விரைவில் காண்பேன் என நம்புகிறேன். கூட்டத்திற்காக நியூயார்க் செல்லும் வழியில் உங்களை விரைவில் சந்திப்பேன். சகோதரன் விக் (Brother Vick) நடத்தும் ஸ்டோன் சபையில் (Stone Church) கூட்டங்கள் நவம்பர் 12-ம் தேதி முதல் தொடங்கவிருக்கின்றன என்று நினைக்கிறேன். அதற்கு முன்பாக சில நாட்களை இங்கு கழிக்கலாம். கூட்டங்களை முடித்து திரும்பி வரும் போது, லூசியானாவிலுள்ள ஷ்ரீவ் போர்ட்டில், சகோ. ஜாக்மூர் சபைக்குச் செல்ல எத்தனித்துள்ளோம். “நன்றி கூறும் வாரத்தின் போது (Thanks giving week) அங்கு இருப்போம். இந்த அறிவிப்புகள் அறிக்கை பலகையில் போடப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். 5பின்பு கிறிஸ்துமஸ் கழிந்து, தென்பாகத்திலுள்ள நண்பர்களுடன் கழிக்க விரும்புகிறேன். ஜனவரி மாதத்தின் போது பீனிக்ஸில் இருப்போம். பின்னர் வெளிநாட்டு அழைப்புக்காக காத்திருப்போம். அது வந்தால், அதற்கான கூட்டங்களுக்காக ஆயத்தம் செய்வோம். வெளிநாட்டுக் கூட்டங்களை ஒழுங்கு செய்வதற்கென சகோ. பார்டர்ஸ் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். கடிதப் போக்குவரத்து நடந்து கொண்டிருக்கிறது. அது ஆயத்தமானவுடன், உலக பயணம் ஒன்றை மேற்கொள்ள எத்தனித்துள்ளோம். அதற்குரிய சூழ்நிலை உருவாகும் வரை நாங்கள் காத்திருக்கவேண்டும். அங்கு கூட்டங்கள் திரளாயிருக்கும். அவர்களைக் கட்டிடங்களில் அடைக்க முடியாது. திறந்த வெளிகளில் தான் கூட்டங்களை நடத்தவேண்டும். சில சமயங்களில் 5,00,000-க்கும் அதிகமானவர்கள் ஒரே ஒரு கூட்டத்திற்கு வருவார்கள். அதை நம்மால் நம்பவே முடியாது. அநேக நாட்கள் நடக்கும் கூட்டத்திற்கு வருபவரின் எண்ணிக்கையல்ல அது - ஒரே ஒரு கூட்டத்திற்கு வரும் ஜனத்தொகை. சாதாரணமாக சுவிசேஷகர்கள், ஆறு வாரங்களில் எத்தனை பேர் கூட்டத்திற்கு வந்திருந்தனர் என்று கணக்கிடுவது வழக்கம். பாருங்கள்? நாமோ ஒரு நாளில், ஒரு கூட்டத்திற்கு எத்தனை பேர் வந்திருந்தனர் என்று கணக்கிடுகிறோம். அவர்களை உட்கார வைக்க அங்கு போதிய ஸ்தலம் கிடையாது. அவர்களை நாம் திறந்த வெளியில்தான் உட்கார வைக்கவேண்டும். எனவே மழைக்காலமில்லாத சமயங்களில் மாத்திரமே நாம் அங்கு கூட்டங்களை நடத்த முடியும். சில நேரங்களில் நல்ல ஆடை அணிந்துள்ள பெண்கள் மழையில் நனைந்து, தலைமயிர் தலையுடன் ஒட்டிக்கொண்டு, நாள் முழுவதும் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதை நான் கண்டிருக்கிறேன். அங்கு பயங்கர மழையும், இடியும் மின்னலும் காற்றும் நேரிடுவது வழக்கம். ஆனாலும் இவர்கள் அந்த மழையிலும் ஒருவரையொருவர் நெரித்துக் கொண்டு நான் அவர்களுக்காக ஜெபம் செய்யுமளவும் மழையில் நனைந்தவர்களாய் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். பாருங்கள் அப்படிப்பட்ட விசுவாசத்தை கர்த்தர் கெளரவிக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் உண்மையாகவே கெளரவிக்கிறார். 6தேவன் கெளரவிக்க வேண்டுமானால், அதற்காக ஏதாவதொன்றை நீங்கள் செய்ய வேண்டியவர்களாயிருக்கின்றீர்கள். எல்லாவற்றையும் எளிதாகப் பெற்றுக் கொள்பவர், அதற்காக ஒன்றையுமே செய்வதில்லை. பாருங்கள்? தேவனுடைய வரம் என்னமோ இலவசமாகத்தான் அளிக்கப்படுகிறது என்பது உண்மை. ஆனால் நீங்களோ... இது இப்படியிருக்கிறது. ஒருவன் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தான் என்றால் (அந்தப் பழமொழியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்) (அதாவது எல்லா சௌகரியங்களுடனும் பிறந்தவன் என்று அர்த்தம் - தமிழாக்கியோன்). அவன் எதையுமே பொருட்டாக எண்ணுவதில்லை. ஆனால் ஒருவன் அதற்காக முயற்சி எடுக்கும் போது, அதன் முக்கியத்துவத்தை அவன் அறிந்து கொள்கிறான். 7ஒலிநாடாவைப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள் என நான் நினைக்கிறேன்... இன்று காலை நான் அளித்த செய்தி என் முழு ஊழியத்திலும் அளிக்கப்பட்ட செய்திகளிலேயே மிகப் பிரதான ன செய்தியாகும். அது எப்படி எனக்குக் கிடைத்தது என்பதை ஒரு நாள் உங்களுக்கு அறிவிப்பேன். அநேக மாதங்களாக எல்லாமே செயல் புரிந்து, அந்த செய்தியில் முடிவுற்றது. அதுதான் எல்லா செய்திகளையும் முடிவுறச் செய்யும் செய்தியின் தருணமாகும் (Capping-off time) பாருங்கள்? (சகோ. பிரான்ஹாம் அவரளித்த அடையாளம் Token என்னும் செய்தியை இங்கு குறிப்பிடுகின்றார். அச்செய்தி தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). 8அடையாளம் (Token) என்பதின் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என நம்புகிறேன். இரத்தம் பூசப்பட்டது என்றும், தேவனுக்கும் அவசியமான கிரயத்தை இயேசு தமது சொந்த இரத்தத்தை சிந்தி செலுத்தி தீர்த்துவிட்டார் என்பதற்கு அறிகுறியாக அந்த அடையாளம் அமைந்துள்ளது. இயேசுவின் ஜீவனிலிருந்து பரிசுத்த ஆவி வந்தது. அந்த இரத்தம் உங்கள் மேல் பூசப்படும் போது, உங்களுடைய கிரயம் செலுத்தப்பட்டுவிட்டது என்றும், தேவன் உங்களை ஏற்றுக் கொண்டார் என்பதற்கும் அடையாளமாக பரிசுத்த ஆவி அமைந்துள்ளது. அதுவே அடையாளம். கவனியுங்கள், பரிசுத்த ஆவியே அடையாளம். அநேகருக்கு அடையாளம் என்னவென்று தெரியவில்லை. மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடாத விதமாகவே அதை செய்ய வேண்டியதாயுள்ளது. அதே சமயத்தில் எல்லோருமே அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற விதத்தில் கூற வேண்டியதாயுள்ளது. 9இரட்சிப்பைக் குறித்து பிரசங்கிப்பது போன்றது அது. அதைப் பிரசங்கிக்கும் போது, அது எல்லோருக்குமே உரியது என்ற விதமாய் நாம் பிரசங்கிக்க வேண்டியதாயுள்ளது. ஆனால் அது அவ்விதமில்லையென்று நாமறிவோம். அவ்வாறே, தெய்வீக சுகமளித்தலும் எல்லோருக்குமே உரியது என்று நாம் பிரசங்கிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். ஆயினும் அது அவ்விதமல்லவென்று நாமறிவோம். பாருங்கள்? உலகத் தோற்றத்துக்கு முன்னால் மீட்பின் புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்களை இரட்சிக்கவே இயேசு வந்தார். அவர்களை இரட்சிக்கவே அவர் வந்தார், அவர்கள் யார் யாரென்று எனக்குத் தெரியாது. எவனாகிலும் (Whosoever) என்று நாம் கூறினும், கர்த்தர் ஒருவனை அழைக்காவிடில், அவன் வரமுடியாது. அவனுக்குப் போதிய விசுவாசம் இராது. அது சரி. எனவே அநேகர் இரட்சிக்கப்படமாட்டார்கள். அது நமக்குத் தெரியும். அவர்கள் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்று உலகம் உண்டாவதற்கு முன்னமே கர்த்தர் அறிந்திருந்தார். 10அநேகர் தெய்வீக சுகம் பெற மாட்டார்கள். ஏனெனில் அதைக் கிரகித்துக் கொள்ளும் தன்மை அவர்களுக்கு தெரியாது. அப்படியிருந்தும் தெய்வீக சுகம் எல்லோருக்கும் உரியது என்று நாம் பிரசங்கிக்கின்றோம். ஏனெனில் யார் யார் சுகம் பெறுவார்கள் என்று நமக்குத் தெரியாது. ஆனாலும் அது எல்லோருக்கும் என்ற விதமாய் நாம் பிரசங்கிக்கின்றோம். ஆனால் சிலர் அந்த விசுவாசத்தை கிரகித்துக் கொள்ளவே முடியாது. “அடையாளம்” பெற்றுக் கொள்ளுதலைக் குறித்த விஷயத்திலும் அவ்வாறே உள்ளது. நாம் இவ்வளவு காலமாக அடையாளத்தைப் பற்றி பேசிக் கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் இப்பொழுது தான் அந்த அடையாளம் வெளிப்படுகின்றது. பாருங்கள்? 11நாம் அதை அனுமதித்து வந்திருக்கிறோம். லூத்தரன்கள் வார்த்தையை. கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வதை அனுமதித்து வந்தனர். மெதோடிஸ்டுகள், ''கூச்சலிடும் அளவுக்கு நீங்கள் மகிழ்ச்சியுற்றால், அதை நீங்கள் பெற்றுக் கொண்டதாக அர்த்தம்“ என்றனர். பெந்தெகொஸ்தேயினர் ''நீங்கள் அந்நிய பாஷை பேசினால், அதை பெற்றுக் கொண்டீர்கள்” என்றனர். அவையனைத்தும் தவறென்று நாமறிவோம். பாருங்கள்? அடையாளம் என்பது அந்த அடையாளமே. அது நீயும் கிறிஸ்துவும் ஒன்றாக இணைந்து ஒரே நபராக இருப்பதைக் குறிக்கிறது. அவருடைய ஜீவனாகிய பரிசுத்த ஆவியானவர் உன் மூலம் கிரியை செய்வதை அது குறிக்கிறது. பாருங்கள்? அது ஐசுவரியவான்களுக்கும் தரித்திரருக்கும், அதைப் பெற்றுக் கொள்ளும் யாவருக்கும் உரியது. கவனியுங்கள் அடையாளம் என்பது... 12நீங்கள் ரயிலடிக்குச் சென்று கட்டணத்தைச் செலுத்துகின்றீர்கள். அதற்கு ஒரு கிரயம் உண்டு. பேருந்திலோ அல்லது ரயிலிலோ இந்தியானாவிலுள்ள சார்லஸ் டெளன் என்னும் இடத்திற்கு செல்ல வேண்டுமாயின், அதற்குக் கட்டணம் ஐம்பது சென்டு (ஏறக்குறைய ஐந்து ரூபாய்) அதை செலுத்தினவுடனே ரயில் நிலையத்தார் ஒரு டோக்கனைக் கொடுக்கின்றனர். பாருங்கள் நீங்கள் அங்கு சென்று ஐம்பது சென்டு கட்டணமாக செலுத்துகின்றீர்கள். அப்பொழுது உங்களுக்கு ஒரு 'டோக்கன்' கொடுக்கப்படுகின்றது. அந்த இடம் வரை ரயிலில் செல்ல 'டோக்கன்' உங்களுக்கு உரிமையளிக்கின்றது. பாருங்கள்? 13ஆனால் இந்த விஷயத்தில் இரத்தமே அடையாளமாயுள்ளது. அது பூசப்பட வேண்டும். ஏனெனில் அது ஒரு இரசாயணம் மாத்திரமே. அது ஒரு ஆட்டுக்குட்டியின் - மிருகத்தின் இரத்தமாயுள்ளது. மிருகத்தின் உயிர் அதனின்று பிரிந்து சென்றது. பாருங்கள்? எனவே அது விசுவாசியின் மீது மறுபடியும் வர முடியாது. ஏனெனில் அங்கு செத்தது ஒரு மிருகம் தான். ஆனால் பரிபூரணமான பலி ஒன்று வரப் போகின்றது என்பதன் நல் மனச்சாட்சியின் அடையாளமாக அந்த பலி செலுத்தப்பட்டது. அது பரிபூரணமாக இருப்பதற்காக, பரலோகத்தின் தேவனே, நியாயதிபதியே, பலியாகவும் முறைகாண ஆயமாகவும் (Jury) வழக்கறிஞராகவும் ஆனார். பாருங்கள் அவருடைய ஜீவன் வெளியே சென்றபோது, அது தேவனுடைய ஜீவனாயிருந்தது. அந்த சொல் இதிலிருந்து வருகிறது. ''அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பேன்'' கிரேக்க மொழியில்... (நான் வேத பண்டிதர்களிடம் பேசுகிறேன் என்றறிவேன். இங்கு மூவரைக் காண்கிறேன்). கிரேக்க மொழியில் அது 'சோ' (Zoe) என்றழைக்கப்படுகிறது. அந்த சொல்லுக்கு 'தேவனுடைய சொந்த ஜீவன்' என்று அர்த்தம். நான் அவர்களுக்கு சோவை - என் சொந்த ஜீவனை கொடுக்கிறேன். ''கிறிஸ்துவும் தேவனும் ஒருவரே“. 14கிறிஸ்துவுக்குள் இருந்த ஜீவனே பரிசுத்த ஆவி. அது மூன்றாம் ஆளல்ல, அதே ஆள் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் உன்மேல் வந்து, உன் கிரயம் செலுத்தப்பட்டுவிட்டது என்பதற்கு அடையாளமாயிருக்கிறார். நீ ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டாய். அந்த 'டோக்கன்' கிடைக்கும் வரைக்கும் நீ ரஸ்தாவில் செல்லுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாய்; பேருந்தில் பயணம் செய்ய உனக்கு அனுமதி கிடையாது. கட்டணம் செலுத்தப்பட்டுவிட்டது என்பதற்கு அறிகுறியாக அந்த 'டோக்கனை' நீ காண்பித்தாலான்றி, பேருந்தில் ஏறுவதற்கு உனக்கு அனுமதி கிடைக்காது. அந்த டோக்கன் தான் நீ செலுத்தின கட்டணத்தின் அடையாளம். இரத்தம் சிந்தப்பட்டதென்றும், அது உன்மேல் பூசப்பட்டுள்ளதென்றும், நீ ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டாய் என்றும் அது காண்பிக்கிறது. உங்களுக்குப் புரிகின்றதா? ஓ, என்னே! ஓ! (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). 15அதற்கு எந்தவித அத்தாட்சியும் கிடையாது. பாருங்கள்? ''அப்படியானால் சகோதரன் பிரான்ஹாமே நாங்கள் எவ்விதம் இதை அறிந்து கொள்ளலாம்“? என்று கேட்கலாம் (அந்த விதமாக நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்பதை நான் உணருகிறேன் பாருங்கள்?) நீங்கள் முன்பு என்னவாயிருந்தீர்கள்? இப்பொழுது என்னவாயிருக்கிறீர்கள்? அப்படித்தான் அதை அறிந்து கொள்ள முடியும். இந்த அடையாளத்தை பெற்றுக் கொள்வதற்கு முன் நீங்கள் எப்படியிருந்தீர்கள்? உங்கள் விருப்பங்கள் முன்பு என்னவாயிருந்தன? அதன் பின்பு உங்கள் விருப்பங்கள் என்ன? அதன் மூலம் அடையாளம் பெற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையாவென்று நீங்கள் அறிந்து கொள்ளலாம். இயற்கையாகவே இத்தகைய மாற்றம் ஏற்பட்டுவிடுகின்றது. பாருங்கள்? 16“அந்நிய பாஷை பேசுதலே பரிசுத்தாவியைப் பெற்றதன் அத்தாட்சி” என்று நீங்கள் கூறலாம். நான் ஒரு ஜதை காலணியை (Shoes) வாங்குகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அந்த காலணியின் நாக்கு (Tongue) (அதாவது காலணிக்குள் வைக்கப்பட்டிருக்கும் மிருதுவான தோல் - தமிழாக்கியோன்) காலணியல்ல. அது காலணியுடன் சேர்ந்து வருகின்றது. அவ்வாறுதான் அடையாளமும் கூட. அந்த அடையாளம் கிறிஸ்து. அந்நிய பாஷை பேசுதல், பிசாசுகளைத் துரத்துதல், மற்ற காரியங்களைச் செய்தல், பிரசங்கித்தல் போன்றவை அத்தாட்சி என்பது ஒரு வகையில் உண்மையே. ஆனால் அவை யாவும் அதுவல்ல. அவை பரிசுத்த ஆவியின் வரங்கள் (gifts). நீங்கள், “சகோதரன் பிரான்ஹாமே, உங்களுக்கு வெகுமதி (gifts) அளிக்க விரும்புகிறேன்'' என்று சொல்வீர்களானால், அந்த வெகுமதி நானல்ல; அது நான் பெற்றுக் கொண்ட வெகுமதி. அதுபோன்று, அந்நிய பாஷை பேசுதல் என்பது பரிசுத்த ஆவியினால் அளிக்கப்படும் ஒரு வெகுமதி அல்லது வரமாகும். அது பரிசுத்த ஆவியாகிவிட முடியாது. அது பரிசுத்த ஆவியின் வரம். 17இந்த வரங்கள் அனைத்தையும் பிசாசினால் பாவனை செய்ய முடியும். ஆனால் அவன் பரிசுத்த ஆவியாக இருக்க முடியாது. பாருங்கள்? அவன் வரங்களைப் பாவனை செய்யலாம். ஆனால் அவன் பரிசுத்த ஆவியாக முடியாது; இரத்தம் பூசப்பட்டது என்பதற்கு அடையாளமாக பரிசுத்த ஆவி உள்ளது. ஏனெனில் அது மீட்பின் புஸ்தகத்திலிருந்து இரத்தத்தை பின் தொடர்ந்து கொண்டே வருகிறது. உங்களுக்குப் புரிகின்றதா? அவர் வந்ததன் நோக்கம் அதுவே. ஒவ்வொரு சபை காலத்திலும் அவர் அதைப் பின் தொடர்ந்து வந்துள்ளார். நம்மையல்லாமல் அவர்கள் பூரணராக முடியாது. இக்காலத்திலோ பரிசுத்த ஆவியின் பரிபூரணம் சபையைச் சந்தித்தது, சோதோம் எரிவதற்கு முன்பாக அவர் எப்படி மாமிசத்தில் வெளிப்பட்ட தேவனாகத் தோன்றினாரோ, அவ்வாறே இன்றும் தோன்றுகிறார். சோதோமில் நிகழ்ந்தது இதற்கு முன்னடையாளமாயுள்ளது. அப்பொழுது அவர் ஆபிரகாமுக்கு தோன்றினார். சபை காலங்களின் போது அவர் புரியாத செயல்களை இக்காலத்தில் புரிகிறார். வார்த்தைக்கு மறுபடியும் திரும்பும்படியாக அவர் செய்கிறார். ஏனெனில், சபை காலம் ஒவ்வொன்றிலும் அளிக்கப்பட்ட செய்திகள் அனைத்தும் பரிபூரண வார்த்தையுடன் முடிவடைய வேண்டும். இந்த கடைசி நாட்களில் ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டுவிட்டன. எனவே முந்தின சபை காலங்களில் விடப்பட்ட சத்தியங்கள் அனைத்தையும் எடுத்து ஒன்று சேர்த்து, அது மணவாட்டியின் ஒரு பெரிய சரீரமாக ஆகிவிடுகின்றது. சபை பரிபூரணமாகாமல் முன்பிருந்த காலங்களில் வாழ்ந்தவர்கள் பரிபூரணமாக முடியாது. எனவே இக்கடைசி காலத்திலுள்ள மணவாட்டி குழுவினர், அவர்களையும் உள்ளே கொணர்ந்து, அவர்களனைவரும் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுவார்கள். பாருங்கள்? 18இயேசு கிறிஸ்துவாகிய அடையாளம் - பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது நம்மிடையே இருக்கிறார். நாம் அதை பயபக்தியுடன் அணுகவேண்டும். நம்மை போதிய அளவிற்கு தாழ்த்த நம்மால் இயலாது. நாம் காலணிகளைக் கழற்றினாலும் அல்லது முழங்காற் படியிட்டாலும், அத்தகைய தாழ்மை அவருக்கு திருப்தியளிக்காது. ஆனால் ஆவியின் கனிகளை வெளிப்படுத்தும் வாழ்க்கை! இப்பொழுது, ஆவியின் கனிகள் யாவை? பாருங்கள். அன்பு, சந்தோஷம், சமாதானம்... இன்று காலையில் பிரசங்கிக்கப்பட்டதை நினைவில் கொள்ளுங்கள். ஆயத்தம் - ஒரு செய்தியுடன் அவர் செய்தியாளனை அனுப்பினார். அவ்விதம் அனுப்பின பிறகு, அதை உறுதிப்படுத்த அவர் அடுத்தப்படியாக அக்கினி ஸ்தம்பத்தை அனுப்பினார். அதற்கு அடுத்ததாக - ஆறுதல் (Consolation) அது உண்மையென்று நீங்கள் அறிவீர்கள். பாருங்கள்? ஏனெனில் நீங்கள் சமாதானம் பெற்றிருக்கின்றீர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நாம் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம் (ரோமர் 5:1) 19இன்றிரவு நாம் பிணியாளிகளுக்காக ஜெபிக்கப் போகின்றோம். இராப்போஜனமும் வைக்கப் போகிறார்கள் என்று நினைக்கிறேன் (சகோ. பிரான்ஹாம் சகோ. நெவிலுடன் பேசுகின்றார் - ஆசி) நீங்கள் ஞானஸ்நானமும் கொடுக்கப் போகிறீர்களா? இராப்போஜனம் மாத்திரம். நீங்கள் இராப்போஜனத்திற்கு இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இன்னும் முப்பத்தைந்து அல்லது நாற்பது நிமிடங்களில் முடித்துவிடலாம் என்றிருக்கிறோம். அதன் பின்பு நாம் இராப்போஜனத்திற்காக ஆயத்தப்படுவோம். நாளை 'உழைப்பாளர் தினம்' (Labor Day). எனவே நீங்கள் நாளை இளைப்பாறலாம். இன்னும் சிறிது நேரத்தில் முடித்து விட வேண்டுமென்று நினைக்கிறோம் என்று சொன்னேன். ஆனால் எங்களுக்குத் தெரியாது. நீங்கள் அதை சரிவர புரிந்து கொள்ள வேண்டும். 20இன்று காலை நான் உங்களிடம், இன்னும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செய்தியிருக்கும் என்று கூறினேன். நான் செய்தியை பிரசங்கிக்கித் தொடங்கினேன். இன்றிரவும் அதை தொடர்ந்து பிரசங்கிக்க எண்ணினேன். அது மிகவும் பிரம்மாண்டமான (tremendous) செய்தியாக இருந்தது. ஜனங்கள் அதைப் புரிந்து கொண்டார்களோ என்னவோ எனக்குத் தெரியவில்லை. அவர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன் - எல்லாவிடங்களிலும் அதை ஒலிப்பதிவு செய்துள்ள நல்ல ஒலிநாடாக்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். அவர்கள் அதைக் கொண்டு செல்லலாம். இதுவரை நான் அளித்துள்ள செய்திகள் அனைத்திலும், இது முற்றிலும் தேவனால் நியமிக்கப்பட்ட ஒரு செய்தியாகும் - இதுவரை அளித்துள்ள செய்திகள் என்னும் போது, ஏழு முத்திரைகளின் செய்திகளை நான் சேர்க்கவில்லை. ஏனெனில் அது தேவனிடத்திலிருந்து நேரடியாக பெற்ற கட்டளை - தேவனுடைய வார்த்தை நேரடியாக வந்தது. நான் பிரசங்கம் செய்துள்ள செய்திகளையே குறிப்பிடுகிறேன். இந்த செய்தி (அடையாளம்) ஏழு முத்திரைகளை தொடர வேண்டியது அவசியமாயுள்ளது. 21ஏழு முத்திரைகள் செய்தியளிக்கப்பட்ட பிறகு என்னென்ன நேரிடுகிறது என்பதைக் கவனியுங்கள். ஜனங்கள் ஒன்று சேருகின்றனர். ஒன்று சேர்தலின் அடையாளம். கடைசி நாட்களில் சிவப்பு விளக்கு எச்சரிப்பாய் விட்டு விட்டுப் பிரகாசித்தல்; பெண்கள் அழகாகிக் கொண்டே போகின்றனர். மனிதரின் செயல்கள்; பரிசுத்த ஆவியின் அடையாளங்கள் தொடர்ச்சியாக நடந்தேறி, ஏழு முத்திரைகளுக்குப் பின்பு அளிக்கப்பட்ட செய்திகள் அனைத்தையும் முடிவுறச் செய்யும் (Capping off) செய்தியாக இந்த ஒரு செய்தி - அடையாளம் விளங்குகின்றது. நாம் சரியானபடி இருக்கிறோம் என்பதை அது நமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது. நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோமா என்று சோதித்தறிய அது நமக்கு உதவியாயுள்ளது. 22கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் வேதாகமத்தை திருப்பும் முன்பு வியாதியஸ்தர்க்கு ஜெபம் செய்தல்... சென்ற ஞாயிறன்று ஜெபம் செய்யப்பட்டவர்களில் எத்தனை பேர் இந்த வாரம் சுகமடைந்தனர் என்று காலை கேட்டபோது அநேகமாக இங்குள்ளோர் எல்லோருமே கரங்களையுயர்த்தினர். சென்ற ஞாயிறு இரவு நடந்த கூட்டத்தில் அவர்களுக்காக ஜெபம் செய்யப்பட்டது. இது ஒன்று... உங்களுக்குப் புரிகின்றதா... இது ஒன்று. இதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்று கூறுகிறேன். 23ஒரு சிறு பையன் சிக்காகோவிலிருந்து வந்திருந்தான். திருமதி (என்ன பெயர்?) (சகோ பிரான்ஹாம் சகோ. நெவிலிடம் அந்த ஸ்திரியின் பெயரைக் கேட்கிறார் - ஆசிரியர்) பெக்கன்பாஃப் (Peckenpaugh). திருமதி பெக்கன்பாஃப் அவர்கள் ஒரு அருமையான கிறிஸ்தவ சகோதரி. அவர்கள் ஒரு சிறு பையனைக் கொண்டு வந்திருந்தார்கள். அவனுக்கிருந்த கோளாறு என்னவென்று மருத்துவர்களும் கூட கண்டு பிடிக்க முடியவில்லையாம். அவனுடைய நுரையீரல் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. செய்திக்குப் பின்பு பரிசுத்த ஆவியானவர் அந்த சிறு பையனிடம் பேசி, அவனைப் பெயர் சொல்லியழைத்து, அவனுடைய நிலைமையை எடுத்துக் கூறி, அவனுக்கு சுகமுண்டாகும்படி கட்டளையிட்டார். இவ்வாரம் அவன் பெற்றோர் அவனை மருத்துவரிடம் கொண்டு சென்ற போது, அவனுக்குப் புது நுரையீரல்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறினாராம். அவன் பெற்றோரோ வேறு யாரோ, இதை தொலைபேசியின் வாயிலாக சபையோருக்கு அறிவித்துள்ளார். சிருஷ்டி கர்த்தராகிய தேவன் ஒரு ஜோடி புது நுரையீரலை சிருஷ்டிக்க முடியும். 24கர்த்தராகிய இயேசுவின் நாட்களிலிருந்து இதுவரை நிகழ்ந்த செயல்கள் அனைத்திலும் மிக மகத்தான செயல் ஒன்று நிகழவிருக்கும் நேரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நிச்சயமாக நம்புகிறேன். பாருங்கள்? பாருங்கள் நாம் இப் பொழுது... (எடுக்கப்படுதலுக்கென) அழைக்கப்பட வேண்டியவர்களாயிருக்கிறோம். அது மிகவும் எளிமையாக இருக்கும். மனிதன் மகத்துவமுள்ளதாய் கருதுபவைகளை தேவன் அருவருப்பாக கருதுகிறார். மனிதன் முட்டாள்தனம் என்று அழைப்பவைகளை தேவன் மகத்துவமானவை என்றழைக்கிறார் பாருங்கள்?அதற்காகக் காத்திருங்கள், அது மிகவும் எளிமையுள்ளதாய் இருக்குமாதலால் அதைப் பரிசோதித்துப் பார்க்க உங்களிடம் அடையாளம் இராவிடில், அதை இழந்துவிடுவீர்கள். பாருங்கள்? பாருங்கள்? 251200 அல்லது 712 ஆண்டுகளுக்கு முன்பு ஏசாயா தீர்க்கதரிசி முன்னுரைத்தபடியே, தீர்க்கதரிசி ஒருவன் முகம் முழுவதும் தாடி, வளர்ந்தவனாய், ஆட்டுத்தோல் போர்த்திக் கொண்டு, வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு வந்தபோது, மலைகள் ஆட்டுக்கடாக்களைப் போல் துள்ளுமென்றும், இலைகள் கைகொட்டுமென்றும் யார் நினைத்தது? பிரசங்கம் செய்ய அவனுக்கு ஒரு பீடம் கூட கிடைக்கவில்லை. அவன் சபைகள் அனைத்தினின்றும் பிரஷ்டம் செய்யப்பட்டான். அவன் யோர்தானின் கரையில் நின்றுகொண்டு, “மனந்திரும்புங்கள்'' என்று உரக்க சத்தமிட்டான். ஜனங்களை அவன் விரியன் பாம்புக் குட்டிகள் என்றழைத்தான். அவன் வரும்போது மலைகள் ஆட்டுக்கடாக்களைப் போல் துள்ளுமென்று தேவன் கூறியிருந்தார். பாருங்கள், எளியவர்கள் அதைக் கண்டு மகிழ்ந்தனர். மகத்தான மேசியாவின் வருகையைக் குறித்து ஆதியாகமம் தொடங்கி வேதாகமத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தது. இரட்சகர் ஒருவர் தோன்றுவார் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது. எல்லா பலிகளும் அவரையே சுட்டிக் காட்டின. தீர்க்கதரிசிகளும் அவரையே சுட்டிக் காண்பித்தனர். ஆனால் அவர் வந்த போதோ, அவர் முறை தவறி பிறந்ததாகக் கருதப்பட்டார். அவருடைய தாய் அவளுக்கு விவாகம் ஆவதற்கு முன்பே குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தாள். அவர் முன்னணையில் பிறந்தார் என்று வேதம் கூறுகின்றது. அது ஒரு குகையாகும். அத்தகைய குகை ஒன்றை, வேட்டைக்குச் சென்றிருந்தபோது, நான் அரிசோனாவில் கண்டிருக்கிறேன். அங்கு செங்குத்தான பாறைகளினிடையே ஒரு தொழுவம் இருந்தது. அவ்விதமான தொழுவம் ஒன்றில்தான் இயேசு பிறந்தார் - மலையில் காணப்படும் சிறு தொழுவம் ஒன்றில், வைக்கோலால் நிறைக்கப்பட்ட மாட்டு தொழுவத்தில். 26அவர் தச்சனின் உதவியாளராக வளர்க்கப்பட்டார். அது எங்ஙனம் மகத்தான யேகோவாவாக இருக்க முடியும். ஆனால் அது யேகோவாதான் பாருங்கள்? மிகவும் விசித்திரமான ஆள். அவர் சிறுவனாக இருந்தபோது, தமது வார்த்தையின் அறிவைக் கொண்டு ஆசாரியர்களைத் திகைக்க வைத்தார். பாருங்கள். அவரே வார்த்தை. அவர் ஒரு புத்தகம் கூட எழுதவில்லை. ஒரு வார்த்தையும் கூட அவர் எழுதினது கிடையாது. ஒரு ஸ்திரீ விபச்சாரத்தில் கண்டு பிடிக்கப்பட்டபோது, அவர் குனிந்து தரையில் எழுதின அந்த ஒரு வார்த்தையையும் கூட அவர் அழித்துவிட்டார். அவர் ஒரு வார்த்தை கூட எழுதினதில்லை. ஏன்? அவரே வார்த்தை. பாருங்கள்? அவரே வார்த்தையாயிருந்ததால், அவருக்கு எழுத வேண்டிய அவசியம் இல்லாமற் போயிற்று. அவரது வாழ்க்கை அந்த வார்த்தையை வாழ்ந்து காட்டினது. அவரே வார்த்தை. “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை” (யோவான் 10:37). “நான் என்ன செய்வேன் என்று வார்த்தை கூறியுள்ளதை நான் செய்யாமலிருந்தால், நான் வார்த்தையல்ல, செய்தேனேயானால்...'' அந்த அர்த்தத்தில்தான் அவர் கூறினார். அவரே வார்த்தை. 27இப்பொழுது, இனி நடக்கவிருக்கும் சுகமளிக்கும் ஆராதனைக்கும் இராப்போஜனத்திற்கும் உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களால் கூடுமானால், நீங்கள் இராப்போஜனதிற்குத் தங்கிச் செல்வது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் இல்லையென்றால், இப்பொழுதோ கூட்டத்தை முடித்துக் கொள்ளலாம். எனக்காகவும் என் மனைவிக்காகவும் ஜெபிக்க மறந்து போக வேண்டாம். என் மனைவி உலகிலுள்ள எல்லா பெண்களைக் காட்டிலும் மிகவும் இனிமையானவள். என் பிள்ளைகளுக்காகவும் ஜெபியுங்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக உரிமை கோருகிறேன். 28பெக்கி (Becky) சிறு பெண்ணாக இளம் பருவத்தில் இருக்கிறாள். அவள் மிகவும் அருமையான பெண். அதற்காக நான் தேவனைத் துதிக்கிறேன். அவள் புகை பிடிப்பதில்லை. மது அருந்துவதில்லை. யாருடனும் சுற்றுவதில்லை. அந்த பருவத்தில் அவள் இருக்கிறாள். அவள் கவலையீனமாக இருக்கிறாள். சபைக்குச் செல்ல அவளுக்கு விருப்பமில்லை. அப்படி சென்றாலும், அங்கு உட்கார்ந்து கொண்டு மெல்லும் பிசின் (Chewing gum) மென்று கொண்டிருப்பாள்; பின்பு எழுந்து சென்றுவிடுவாள். அவள் பரிசுத்த ஆவியால் நிறையப்படுவதைக் காண விரும்புகிறேன். என் மகன் ஜோசப் போதகனாவதைக் காண விரும்புகிறேன். என்னால் பிரசங்க பீடத்திற்கு நடக்க முடியாத நிலையைடையும். அந்நாளில், பழமையாய் போன என் வேதாகமத்தை அவன் கைகளில் கொடுத்து, “என் மகன் ஜோசப்பே, இதில் நிலைத்திரு” என்று கூற விரும்புகிறேன். அப்பொழுது நான் மேலே செல்ல ஆயத்தமாவேன். எங்காவது காற்றடிக்கும் சத்தத்தை நான் கேட்டு, மேல் நோக்கி, என் கரங்களையசைத்து விடைபெற்று மேலே செல்ல விரும்புகிறேன். நாம் ஜெபம் செய்வோம். 29பிதாவாகிய தேவனே, எங்கள் முழு வாழ்க்கையுமே அதில் சுற்றப்பட்டுள்ளது. ஏனெனில் அது நீரும் உம்முடைய ஜீவனுமாம். ஆண்டவரே, இங்குள்ளவர்களில் சிலர் நான் பேசிக் கொண்டிருந்த அடையாளத்தைப் பெற்றுள்ளனர். அவர்கள் அதைப் பெற்றிருந்தும், வியாதிப்பட்டுள்ளனர். தேவனால் அளிக்கப்பட்டுள்ள உரிமையை அவர்கள் பெற்றுக் கொள்ள அவர்களை ஊக்குவிக்கக் கருதி இன்றிரவு நான் பேச விரும்புகிறேன். பிசாசை தோற்கடிக்க அவர்களுக்கு உரிமையுண்டு. அவன் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டான். அவர்களிடம் அவன் பொய் சொல்லுகிறான். பிதாவே, அவர்களை நான் உரிமை கோருகிறேன். வார்த்தையை எடுத்துரைக்க எனக்கு இப்பொழுது உதவி செய்யும். ஆண்டவரே, நான் எழுதி வைத்துள்ள இச்சிறு குறிப்புகளையும் வேத வாக்கியங்களையும் கொண்டு, என் மூலமாய் பேசும். ஆண்டவரே, எனக்குதவி செய்து, வார்த்தையை எடுத்துரைக்க, தேவனுடைய மகிமைக்காக அவர்களுக்கு விசுவாசத்தை அருளுவீராக! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். 30நீங்கள் துரிதமாக எரேமியாவின் புஸ்தகம் 29-ம் அதிகாரத்திற்கு உங்கள் வேதாகமத்தை திருப்புங்கள். நீங்கள் படிக்க விரும்பினால் சரி, இல்லையெனில் அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். எரேமியா 29-ம் அதிகாரம், 10-ம் வசனத்திலிருந்து நாம் படிக்கப் போகின்றோம். அல்லாமலும், லூக்கா 16-ம் அதிகாரம், 14-ம் வசனம் முதற்கொண்டும் நாம் படிக்கப் போகின்றோம். 31நீங்கள் வேதாகமத்தைத் திருப்பிக் கொண்டிருக்கும் போது, நான் பேசவிருக்கும் பொருளை உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். இன்றிரவு நான் பேசவிருக்கும் பொருள், ''பதறல்'' (Desperation) என்பதாகும். “பதறல்” என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும். இப்பொழுது எரேமியா 29-ம் அதிகாரம் 10-ம் வசனத்திலிருந்து நாம் படிக்கப் போகின்றோம். பாபிலோனில் எழுபது வருஷம் நிறைவேறின பின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பி வரப் பண்ணும்படிக்கு உங்கள் மேல் என் நல்வார்த்தையை நிறை வேறப் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் எதிர் பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும் படிக்கு நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (அது மிகவும் அருமையானதல்லவா?) அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னை தொழுதுக்கொண்டு என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவீர்கள்; நான் உங்களுக்கு செவிகொடுபேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னை தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி, நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பி வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (மறுபடியும் பெந்தெகொஸ்தே உபதேசத்திற்கு! இதை நானாக கூறுகிறேன். இங்கு அவ்விதம் கூறப்படவில்லை. சபைக்கு அந்த அர்த்தத்தில் தான் இதை கூறுகிறேன்). எரே. 29:10-14, லூக்கா 16-ம் அதிகாராம், 15-ம் வசனத்திலிருந்து - இல்லை, 16-ம் வசனம். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான் வரைக்கும் வழங்கி வந்தது. அது முதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது. யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள் (அதினுள் எளிதாக நடந்து சென்றுவிடவில்லை. பலவந்தமாக அதில் பிரவேசிக்க வேண்டும் பாருங்கள்?) “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைக் கண்டுபிடிப்பீர்கள்”. 32உலகின் எல்லா பாகங்களிலும் சிதறியிருந்த மக்களை, அந்த எழுபது ஆண்டுகள் முடிவடைந்த பின்பு, அவர்கள் விட்டுச் சென்ற எருசலேமுக்கே அவர்களைத் திரும்பி வரப் பண்ணுவதாக தேவன் வாக்களித்திருந்தார். அதே விதமாக அவர் அதை நிறை வேற்றினார். அது உண்மை. 33சில நிமிடங்கள் நாம், 'பதறல்' என்பதைக் குறித்து பேசப் போகின்றோம். நம்மை பதறல் நிலைக்குக் கொண்டு வருவதே ஒரு அவசர நிலையாகும் (Emergency) பாருங்கள்? அவ்விதம் பதறுவது மோசமானதுதான். ஆனால் மானிடர் தங்கள் சிந்தனைகளில் மிகவும் மந்தமாக இருக்கும் காரணத்தால், அவர்களை இயக்குவிக்க அவசர நிலை ஒன்று தேவைப்படுகின்றது. ஏதோ ஒன்று நேரிடுகிறது; அவர்கள் அதை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகின்றது... அது அவர்களை பதறும் நிலையில் ஆழ்த்துகின்றது. பதறுலுடன் அவர்கள் அதை செய்யும் போது, அவர்களுடைய உண்மையான தன்மை அப்பொழுது வெளிப்படுகின்றது. பதறல் தோன்றும் போது, உன் உண்மையான சுபாவம் வெளியாகின்றது. உன்னிலுள்ள எல்லா நற்பண்புகளையும் அது இழுத்து வெளியே கொண்டு வருகிறது. 34மரணத்தருவாயிலுள்ளவரை நான் கண்டதுண்டு. அவர்கள் மரிக்கப் போகிறார்கள் என்று அறிந்தவுடனே, அவர்கள் வாழ்நாள் பூராவும் இரகசியமாக வைத்திருந்தவைகளை (சகோ. பிரான்ஹாம் பதறல் கொண்டு பெருமூச்சு விடுவதைப் போல் காண்பிக்கிறார் - ஆசி) அறிக்கை செய்கின்றனர். பாருங்கள்? “இதை கொண்டு போய் சரிபடுத்து, போ, தயவு செய்து போ, இதை செய்'' என்றெல்லாம் அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் ஏற்கெனவே பதறல் கொண்டு அதையெல்லாம் செய்திருக்க வேண்டும்.அவசர நிலை வரும் வரை அவர்கள் காத்திருக்கக் கூடாது. அவர்கள், ''இன்னின்னதை எனக்காகச் செய்வீர்களா?” என்கின்றனர். அந்த அவசர நிலை அவர்களைப் பதறல் கொள்ளச் செய்கின்றது. 35இன்றிரவு, பஸ்கா பண்டிகைக்கு அடையாளமாயுள்ளவைகளை நாம் புசிக்கப் போகின்றோம். பஸ்கா அவசர அவசரமாக பதறல் கொண்டு புசிக்கப்பட்டது. யாத்திராகமம் 12-ம் அதிகாரத்தில் 11-ம் வசனம் என்று நினைக்கிறேன். ''உங்கள் அரைகளில் கச்சை கட்டிக் கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக் கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய் புசிக்கக் கடவீர்கள்“ பாருங்கள். அவர்கள் பதறும் நிலையில் தீவிரமாய் புசித்தனர். 36அவர்கள் தேவனுடைய மகத்தான செயல்களைக் கண்டனர். அவர் செய்த அற்புதங்கள் அனைத்தையும் அவர்கள் கண்டனர். பின்பு அவர்கள் இரத்த அடையாளத்தின் கீழ் வந்தனர். இரத்தமாகிய அடையாளத்தின் கீழ் அவர்கள் இருந்தபோது, அவர்கள் பதறல் கொண்டு பஸ்காவைப் புசித்தனர். தேவன் நியாயந்தீர்த்து எகிப்தியரை தாக்கப் போகின்றார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அது அசைக்கும் ஒரு சமயம். ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தான் சோதித்தறியும் சமயமாயிருந்தது அது. ஏனெனில் தீர்க்கதரிசியின் வார்த்தையானது ஒருமுறை கூட தவறவில்லை. தீர்க்கதரிசி கூறின அனைத்தும். அவன் கூறிய விதமாகவே நிறைவேறினது. அக்கினி ஸ்தம்பம் அப்பொழுது அங்கு இருந்தது. இரத்தமாகிய அடையாளத்தை வாசலில் கண்டு கர்த்தர் கடந்து போவார் என்று தீர்க்கதரிசி அறிவித்திருந்தான். அது பதறல் கொள்ளும் ஒரு நிலை. 37கறுத்த செட்டைகள் ஆகாயத்திலிருந்து புகையைப் போல் இறங்கி பட்டணத்தின் மேல் தங்கினபோது, ஒவ்வொரு வீட்டிலும் மரணம் நேரிட்டதால், கூக்குரல் எழும்பியிருக்கும். அப்பொழுது இஸ்வேலரின் சிறு பிள்ளைகள் தங்கள் தகப்பன்மாரிடம் சென்று, “அப்பா, நாம் அடையாளத்தின் கீழிருக்கிறோம் என்று நிச்சயமாகத் தெரியுமா?'' என்று கேட்டிருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பார்க்கிறேன். தகப்பனும் கதவினருகில் சென்று, வாசலையும் நிலைக்காலையும் கண்ட பின்பு, “மகனே, அது தேவனுடைய வார்த்தையை அனுசரித்து செய்யப்பட்டது” என்று சொல்லியிருப்பான். மகன் உடனே, “நான் மூத்த பிள்ளை என்பது ஞாபகமிருக்கட்டும், அப்பா உமக்கு நிச்சயமாகத் தெரியுமா?'' என்று கேட்டிருப்பான். “எனக்கு நிச்சயமாகத் தெரியும். தீர்க்கதரிசி நம்மிடம் கூறின விதமாகவே அது செய்யப்பட்டுள்ளது. தீர்க்கதரிசியிடம் தேவனுடைய வார்த்தை உள்ளது. ”இரத்தத்தைக் கண்டு நான் கடந்து போவேன். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ஆட்டுக் குட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கர்த்தர் கூறினதாக தீர்க்கதரிசி நம்மிடம் கூறினார். எல்லா பிள்ளைகளையும் நான் உள்ளே கொண்டு வந்துவிட்டேன். நீ தான் மூத்தவன். மூத்த பிள்ளைகள் தான் எல்லாவிடங்களிலும் சாகின்றனர். ஆனால் நமக்கோ இரத்தம் பூசப்பட்டுள்ளது. கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக அது அமைந்துள்ளது; எனவே மகனே, கவலை எதுவுமின்றி இளைப்பாறு. ஏனெனில் தேவன் அவ்வாறு வாக்குரைத்துள்ளார்“ பாருங்கள்? ''சரி அப்பா, நீர் ஏன் பாதரட்சையை தொடுத்துக் கொண்டிருக்கிறீர்? உமது கையில் ஏன் தடி உள்ளது? ஒரு கையில் அப்பத்தையும், மறு கையில் ஆட்டுக்குட்டியின் மாமிசத் துண்டையும் ஏன் பிடித்துக் கொண்டிருக்கிறீர்? ஏன் கசப்புக் கீரையும் மற்றவையும் உள்ளன? ஏன் அதைப் புசிக்கின்றீர்கள்? உமது முகத்தில் ஏன் வியர்வை வடிந்தோடுகிறது'' “மகனே, மரணம் தாக்கவிருக்கிறது”, பாருங்கள். அது பதறல் கொள்ளும் ஒரு சமயமாயிருந்தது. 38நாமும் அதுபோன்ற நாட்களில் வாழ்ந்து வருகிறோம் என்று நம்புகிறேன். நாம் வாழும் இந்நாட்கள் சபையைப் பதறும் நிலைக்குக் கொண்டு வரவேண்டும். இன்று காலை தேவனிடமிருந்து, என்னிடமிருந்தல்ல, வந்த செய்தியைக் கேட்ட முதற் கொண்டு, அது முழு சபையையும் பதறும் நிலைக்குக் கொண்டு வர வேண்டியதாயுள்ளது. நாம் அதிக நாட்களாக விளையாடிக் கொண்டிருக்கிறோம். நீண்ட காலமாக நாம் சபைக்கு வந்து கொண்டிருக்கிறோம். மற்றவர்களுக்கு அற்புதங்களும் அடையாளங்களும் நிகழ்வதைக் காண்கிறோமே. நம்மைக் குறித்தென்ன? அது நம்மை பதறும் நிலைக்குக் கொண்டுவர வேண்டும். தேவனுக்கு முன்பாக நாம் தீர்மானம் செய்ய வேண்டும். அவருடைய வருகைக்குரிய அடையாளத்தை நாம் தேவனுடைய வார்த்தையில் படிக்கும் போது, அது முழு சபையையும் பதறும் நிலைக்குக் கொண்டு வரவேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம்மிடம், ''இன்னின்ன இடத்திற்குச் செல்; இன்னின்ன காரியம் சம்பவிக்கும்'' என்று கூறுகின்றார். அது எதை குறிப்பிடுகின்றது என்று கூறாமல் அது சம்பவிக்கும் என்று மாத்திரம் கூறுகின்றார். அந்த இடத்திற்கு நாம் செல்கின்றோம். அவர் கூறிய விதமாகவே அது நிகழ்கின்றது. செய்தித்தாள்கள் அதை வெளியிடுகின்றன. பத்திரிகைகள் அதன் புகைப்படத்தைப் பிரசுரிக்கின்றன. அச்சம்பவம் நிகழ்ந்த பின், நாம் திரும்பி வந்து, வேதத்தில் மறைபொருளாயிருக்கும் பரம ரகசியங்கள் - நாம் இதுவரை அறிந்திராதவை - நமக்குத் திறக்கப்பட்டு, அவை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையுடன் பரிபூரணமாக இணைகின்றன. 39செய்திகளின் முடிவில், அந்த மகத்தான பரிசுத்த ஆவியின் கிரியைகளைக் கவனியுங்கள். ஜனங்கள் காணத்தக்க விதமாய் அவர் இறங்கி வந்து, அவருடைய புகைப்படமும் எடுக்கப்பட்டுவிட்டது. அது கிரியைசெய்து, அது மனிதனல்லவென்றும், ஒரு போதகர் மாத்திரமல்லவென்றும், ஒரு பிரத்தியேக சபையல்லவென்றும், இயேசுவின் சரீரத்தில் குடி கொண்டிருந்த போது, அது என்னென்ன கிரியைகளைச் செய்ததோ, அதே கிரியைகளை மறுபடியும் செய்யும் பரிசுத்த ஆவியென்பதையும் அது நிரூபித்துக் காண்பிக்கிறது. தற்காலத்தில் அது அவருடைய மணவாட்டியின் சரீரத்தினுள் குடிக்கொண்டுள்ளது. அது நம்மை பதறும் நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும். 40இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய கரத்தைக் கண்டனர். அன்றிரவு அவர்கள் இராப்போஜனத்தை (பஸ்காவை) பதறும் நிலையில் ஆசரித்தனர். ஏனெனில் ஏதோ ஒன்று நிகழவிருக்கின்றது என்று அவர்களுக்குத் தெரியும். நாமும் கூட ஏதோ ஒன்று நிகழப் போகின்றது என்று அறிந்திருக்கிறோம். கர்த்தருடைய வருகை சடுதியாக இருக்குமென்று (மணவாட்டி) இரகசியமாக எடுத்துக் கொள்ளப்படுவாள் என்றும் ஞாபகமிருக்கட்டும். அவர் இரவில் திருடன் வருகிற விதமாய் வந்து அவளைக் கொண்டு செல்வார். நமது குடும்பத்தின் அங்கத்தினர் திடீரென்று சென்றுவிட்டனர்; நாம் கைவிடப்பட்டோம் என்று நினைக்கும்போது! அது நம்மை பதறச் செய்ய வேண்டும். தேவனுடைய கிருபையினால் நாம் கைவிடப்படுவதில்லை. ஆண்டவரே, எனக்கு விருப்பமில்லாதது ஏதாவது ஒன்றிருக்குமாயின், அது கைவிடப்படுதலேயாகும். என்னைக் கைவிடாதேயும், ஆண்டவரே. சில நாட்கள் முன்பு, மெல்ஜான்சன் இந்தப் பாட்டை பாடுவதைக் கேட்டேன். என் கண்ணீர் கீழே விழும்போது என்னை நினைவு கூரும் (ஆமென்) என் நண்பர்கள் சுற்றிலும் இல்லாதபோது என்னை நினைவு கூரும். யோர்தான் நதியை நான் கடக்கும்போது பட்டியலில் நீர் பெயரழைக்கும் போது என்னை நினைவு கூரும் 41ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் என்னுடைய பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். பெயரழைக்கப்படும் போது அவர் என்னை நினைவுகூர வேண்டுமென்று விரும்புகிறேன். அது நம்மில் பதறலை உண்டாக்க வேண்டும். “மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான் தானே ஆகாதவனாய் போகாதபடிக்கு...” (1 கொரி 9:27) என்று பவுல் கூறினானல்லவா? (ஆங்கிலத்தில் Castaway அதாவது தள்ளப்பட்டு விடுபவனாய் இராதபடிக்கு என்றும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) அவ்விதமாகவும் சம்பவிக்கும். எனவே இத்தனை ஆண்டு காலமாக பிரசங்கம் செய்த பின்பும், அவருக்கு தவறிழைக்கும் ஒரு நிலையை அடைவேனோ என்று சிந்தனை செய்து பார்க்கும் போது, அது என்னை பதறும் நிலையில் ஆழ்த்துகின்றது. நான் அடுத்தபடியாக என்ன செய்யவேண்டும்? செய்ய வேண்டியது என்னவென்று அறியாதவனாய், அது என்னை பயத்திற்குள்ளாக்கிறது. அது என்னை மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் எரிந்து விடுகிறது. அது மிகவும் கடினமான ஒரு நிலை. ஏனெனில் நான் ஜனங்களுடன் கூட இருக்கும்போது அவர்களில் சிலரை கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, நான் எல்லோருக்கும் எல்லாமாயிருந்து கொண்டு, அதே சமயத்தில் அந்த அடையாளத்தை எனக்கு முன்னால் நிறுத்திக் கொண்டிருக்க வேண்டியதாயுள்ளது பாருங்கள்? 42காரியங்கள் படிப்படியாக வளர்ந்து கொண்டு வருவதை என்னால் காண முடிகிறது. ஆனால் அவைகளை ஜனங்களுக்கு எடுத்துரைக்க முடியாதவனாய் இருக்கிறேன். வெவ்வேறு காரியங்களை நான் காண்கிறேன். அவைகளை ஜனங்களுக்கு எடுத்துரைக்க நான் தடை செய்யப்படுகிறேன். எனக்கு வரும் தரிசனங்களின் அர்த்தத்தை அவர்களிடம் விவரித்துக் கூறுவேனானால், அவர்கள் வருத்தமுறுவார்கள். அவ்விதம் செய்யாமலிருப்பதே நல்லது. சில சமயங்களில் தரிசனங்களில் ஆழமான கட்டங்களை நான் அடைந்து எல்லாமே தரிசனமாயிருக்கும் போது, அது என்னை பயத்திற்குள்ளாக்குகிறது. ''நான் தரிசனத்தில் இருக்கிறேன்'' என்று ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு கூறுகிறேன். “அது தரிசனம்தானா? நான் எங்கு நின்று கொண்டிருக்கிறேன்” என்றெல்லாம் சிந்தனை செய்வதால், என் சிந்தனைக்கு அதிக வேலை கொடுக்கிறேன். சில சமயங்களில் ஜனங்களைக் குறித்த காரியங்களை நான் தரிசனத்தில் அறிந்து கொள்கிறேன். அவைகளை அறியாமல் இருந்திருந்தால் நலமாயிருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. தரிசனம் காண விரும்புகிறவர்களும் இத்தகைய ஊழியத்தின் கடினத் தன்மையை புரிந்து கொள்வதில்லை. எனவே அதன் விளைவு என்னவென்பதை அவர்கள் அறியாமலிருக்கிறார்கள். அது நம்மை பதறும் நிலைக்குக் கொண்டு செல்கின்றது. “தேவனாகிய கர்த்தாவே, இதற்கெல்லாம் நான் உத்தரவு சொல்ல வேண்டியவனாயிருக்கிறேன் என்றறிவேன். 43ஒருமுறை ஜாக்மூர் என்னிடம், ''நியாயத்தீர்ப்பு நாளில் நீர் உத்தரவு சொல்ல வேண்டிய அளவுக்கு நான் உத்தரவு சொல்ல வேண்டுமானால், அது எனக்குப் பிரியமாயிராது'' என்றார். அவர் மேலும், ''இந்த மக்களை கர்த்தர் உம் கரங்களில் ஒப்படைத்திருக்கிறார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நீர் கணக்கொப்புவிக்க வேண்டும். உமது ஊழியத்திற்காகவும் நீர் உத்தரவு சொல்ல வேண்டியவராயிருக்கிறீர்“ என்றார். அது ஏறக்குறைய பதினைந்து அல்லது பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னால். அன்று முதற் கொண்டு நான் பதறும் நிலையிலேயே இருக்கிறேன். நான் என்ன செய்வேன்? ஆண்டவரே, நீர் கூறுவதை மாத்திரமே நான் கூறட்டும். சத்தியத்தை மாத்திரமே நான் அவர்களுக்கு அறிவிக்கட்டும். இல்லாவிட்டால் அவர்களிடம் ஒன்றையும் நான் கூறாதிருப்பேனாக. அது என்னைப் பதறச் செய்கின்றது. 44இந்த அடையாளங்கள் தோன்றுவதைக் காணும் போது; பரிசுத்த ஆவியானவர் நம்மை அங்கு கொண்டு சென்று, முத்திரைகளின் இரகசியங்களை மக்களுக்கு அளிப்பதைக் காணும் போது; அவ்வாறே ஏழு சபைகாலங்களின் சத்தியத்தை அளிப்பதைக் காணும்போது; மகத்தான அக்கினி ஸ்தம்பத்தில் அவர் இறங்கி வந்து தம்மை வெளிப்படுத்துவதைக் காணும் போது, அதற்கு அடுத்தபடியாக இறங்கி வந்து ஏழு முத்திரைகளின் இரகசியங்களை வெளிப்படுவதைக் காணும் போது; செய்தித்தாள்களும் பத்திரிகைகளும் அதை வெளியிட்டன. ஏழு தேவ தூதர்கள் ஏழு செய்திகளைக் கொண்டு வந்து வேதம் கூறுவதையே உறுதிப்படுத்தியதைக் காணும்போது அந்த அடையாளங்கள் விட்டு விட்டுப் பிரகாசித்து (Flash) முடிவு காலத்தை அறிவித்து, அது என்னவென்பதை ஜனங்களுக்கு அறிவித்து; தேவன் கிரியை செய்து அவருடைய பிரசன்னத்தை ஜனங்களுக்கு உணர்த்திக் காண்பித்து, பின்பு இன்று காலை, ஒவ்வொரு நபரின் மேலும் அந்த அடையாளம் காணப்பட வேண்டுமென்று அறிவித்த போது, நீங்கள் என்னுடையவர்கள், நான் நேசிப்பவர்கள் (அதாவது இங்குள்ளவர்களும் இந்த ஒலிநாடாக்களைக் கேட்பவர்களும்) நீங்கள் அப்படியானால் அது எத்தகைய பதறலை என்னில் கொண்டு வருகிறதாயிருக்கிறது என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம். 45அவருடைய வருகையின் அடையாளங்கள் கிறிஸ்துவின் ஒவ்வொரு உறுப்பினரையும் பதறும் நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும். நமது ஆத்துமாக்களுக்காகவும், இனி வரப்போகும் நல்வாழ்வுக்காகவும் நாம் கவலை கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். நாம் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் அதனால் லாபம் என்ன? நாம் எதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?நாம் எதற்காக உழைக்கிறோம்? நாம் எதற்காக உண்கிறோம்? நாம் எதற்காக தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்? நாம் வாழ்வதற்காகவே, நாம் எதற்காக வாழ்கிறோம், மரிப்பதற்காக. மரிப்பதற்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாகும் வரைக்கும் நீங்கள் வாழ்வதற்கு தகுதியுள்ளவர்களல்ல. அது உண்மை. ஜனங்கள் சுகமடையும் அநேக அற்புதங்களை நாம் காணும் போது, அது நம்மை பதறச் செய்ய வேண்டும். 46அந்த சிறு பையன்? நான் இப்பொழுது திருமதி பெக்கன்ஃபாக்கைத் தான் நோக்கிக் கொண்டிருக்கிறேனா? நீங்கள்தானே அந்த பையனை இங்கு கொண்டு வந்தீர்கள்? நான் குறிப்பிட்டேனே, அந்த அம்மாள் இதோ இங்கேயே இருக்கிறார்கள். நான் பார்த்துக் கொண்டிருந்த போது, யதேச்சையாக அவர்களைக் கண்டேன். தேவன் ஒரு சிறு பையனுக்கு அதைச் செய்யக் கூடுமானால், அது நம்மை பதறும் நிலைக்கு ஆளாக்க வேண்டும். 47நியூ ஆல்பனியைச் சேர்ந்த ஒருவர் - அவர் ஒருக்கால் இங்கிருக்கலாம். அவர் சகோ. ராபர்ஸனின் நண்பர். அவர் ஒரு சிறுவனைக் கொண்டு வந்திருந்தார். அவருடைய மனைவிக்கு புற்றுநோய் இருந்தது. அவர்கள் சுகம் பெற்றார்கள் என்று நினைக்கிறேன். அந்த சிறுவன் ஆஸ்துமா வியாதியால் அவதியுற்று, மிகவும் மோசமான நிலையில் இருந்தான். அவனுக்கு தொண்டையில் புற்றுநோய் வேறு. அவர் அந்த சிறுவனைக் கொண்டு வந்தார். (பின் பாகத்தில் அவன் கையுயர்த்தியுள்ளதைக் காண்கிறேன்) இன்று காலை அவனுக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. பாருங்கள், பதறல் நிலை. அவர் மனைவி புற்று நோய் கொண்டு இறக்கும் தருவாயில் இருந்த போது, தேவன் அவர்களை சுகமாக்க வல்லவரென்று அவர் அறிந்திருந்தார். அவர் மனைவியை தேவன் சுகமாக்க வல்லவராயிருந்தால், அந்த சிறுவனையும் அவர் சுகப்படுத்த முடியும். அது பதறும் நிலைக்கு கொண்டு வருகின்றது. பாருங்கள்? நீங்கள் (அந்நிலைக்கு வரவேண்டும்). நீங்கள் பதறும் நிலையில் உள்ளபொழுது, தேவன் உங்களுக்கு செவி கொடுப்பார். ஆனால் நீங்கள் சோம்பேறியாயிருந்து கொண்டு, அவர் செய்தாலும் செய்யாமற் போனாலும் கவலையற்றவர்களாயிருந்தால் அது நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்திவிடும். நீங்கள் செய்வதாகக் கூறுகின்றீர்கள். ஆனால் அதை செய்வதற்கு பதறல் அவசியமாயுள்ளது. 48நமக்கு பதறல் இராமலிருப்பதன் காரணம், தேவன் பேரிலுள்ள அன்பு நம்மிடம் குறைவாயிருப்பதே. தேவன் பேரிலுள்ள அன்பு நம்மில் பதறலை உண்டாக்குகிறது என்று நினைக்கிறேன். தேவன் உங்களுக்குள் இருப்பாரெனில் அந்த அடையாளம் உங்களுக்குள் காணப்பட்டால் காலத்தின் நிலையையும் ஜனங்கள் பாவத்தில் உழன்று கிடப்பதையும் நீங்கள் காணும் போது, அது உங்களில் பதறலை உண்டாக்க வேண்டுமென்று நினைக்கிறேன். 49கலாத்தியர் 5-ம், 6-ம் அதிகாரங்களில் (நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால்), விசுவாசம் அன்பினால் கிரியை செய்கிறது என்று தேவனுடைய வார்த்தை தெளிவாகக் கூறுகிறது. பாருங்கள்? விசுவாசம் அன்பினால் கிரியை செய்கிறது. நீங்கள் விசுவாசம் பெறவேண்டுமானால், முதலில் அன்பைப் பெற்றிருத்தல் அவசியம். ஏனெனில் அன்பினால் தூண்டப்படுதலே விசுவாசம் என்பது. அது அன்பினால் தூண்டப்படும் ஒன்றாக உள்ளது. உங்களுக்கு அன்பில்லையென்றால், உங்களிடம் விசுவாசம் இருக்கவே முடியாது. பாருங்கள்? 50உங்கள் மனைவியிடம் நீங்கள் அன்பு கூராமலிருந்தால், உங்களுக்கு எப்படி அவள் பேரில் விசுவாசம் இருக்கும்? இது உலகப் பிரகாரமான அன்பு (Phileo) அப்படியிருக்க, தேவ அன்பு (Agapao) எப்படிப்பட்டதாயிருக்கும்? நீங்கள் தேவனிடத்தில் அன்பு கூராமல் போனால், அது எப்படி உங்களிடம் இருக்கும்? உங்கள் மனைவியை நீங்கள் சிநேகிப்பதாகக் கூறிக்கொண்டு, அதே சமயத்தில் அவளிடம் அதைப் பற்றிக் கூறாமல், அவளிடம் அன்பு காண்பிக்காமல், அவளை கட்டியணைத்து, முத்தம் செய்து, இந்நாட்டிலேயே அவள்தான் சிறப்பாக சமையல் செய்பவள் என்றும், அவள் மிகவும் அழகாயிருக்கிறாள் என்றும் அவளிடம் கூறாமலிருந்தால், அவள் அதை அறிந்துகொள்ளவே மாட்டாள். அவளை நீங்கள் சிநேகித்தால், அதை வெளிப்படையாய் அறிவிக்க வேண்டும். அவ்வாறே நாம் தேவனிடத்திலும் நமது அன்பை அறிக்கை செய்ய வேண்டும். அவரில் நாம் அன்பு கூர்ந்தால், அவரிடம் அதைக் கூறவேண்டும். நாம் உட்கார்ந்து, அவரை கனப்படுத்தி, அவரை ஆராதிக்க வேண்டும். அன்பு நம்மை இவைகளைச் செய்ய ஏவுகின்றது. 51நீங்கள் உங்கள் மனைவிக்கு ஏதாவதொன்றைச் செய்ய வேண்டுமானால், அது உங்களை பதறும் நிலைக்குக் கொண்டு செல்கின்றது. உங்கள் மனைவிக்கு புற்றுநோய் இருக்கிறது என்று யாராகிலும் கூறினால்? அவளுக்கு காசநோய் உள்ளதென்றும் அவள் மரிக்கப் போகிறாள் என்று யாராகிலும் கூறினால்? அவளுக்கு நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள். பாருங்கள், அது உங்களில் பதறலை உண்டாக்கிவிடும். நாம் விசுவாசத்தைப் பெற்றுக்கொள்ளும் முன்பாக நமக்கு அன்பு அவசியமாயுள்ளது. நமக்கு உண்மையான அன்பு இருந்தால், அது என்ன செய்யும்? அது தேவனுடைய சார்பில் நமது விசுவாசத்தைப் போர்க்களத்தில் உந்தித்தள்ளும். தேவன் பேரிலும், அவருடைய வார்த்தையின் பேரிலும் அவருடைய மக்களின் பேரிலுமுள்ள உண்மையான தேவ அன்பு விசுவாசத்தை அங்கு உந்தித்தள்ளும் இறுகப் பிடித்துக் கொண்டு... “அவ்வளவு தான், நாம் போகலாம்'' என்று சொல்லும். அவ்விதம் அது புறப்பட்டுச் செல்கின்றது. அதைத்தான் அன்பு செய்கின்றது. 52“ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக் கொள்ளுவான்” என்று இயேசு யோவான் 14:23-ல் கூறியுள்ளார். அவர் கூறிய வார்த்தைகளில் உங்களுக்கு விசுவாசம் இராமற்போனால், அவைகளை நீங்கள் கைக்கொள்ள முடியாது. ஒருவன் தேவனிடத்தில் அன்பாயிருந்தால் மாத்திரமே, அவருடைய வார்த்தைகளைக் கைக் கொள்வான். அவர், ''நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்“ என்று கூறியிருப்பாரானால், அவன் அதை விசுவாசிப்பான். அன்புதான் அவனை விசுவாசிக்கச் செய்கின்றது. ஏனெனில் அன்பு எல்லாவற்றையும் ஆட்கொள்கிறது. ''நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை'' பாருங்கள்? ''மலைகளைப் பேர்க்கத் தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை'' அன்பு சகலத்தையும் ஆட்கொள்கிறது. ஏனெனில் தேவன் அன்பாயிருக்கிறார். அவர் அன்பின் தேவன். ஆம் ஐயா ”ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்'' என்று இயேசு கூறியிருக்கும் போது... 53பதறலுடன் கூடிய ஒரு ஆத்துமாவை தேவன் சந்திப்பார் என்பது உண்மையென்று நமக்குத் தெரியும். நாமெல்லாரும் அதை அறிவோம். ஆனால், அந்த பதறும் நிலைக்கு நம்மை விரட்டியடிக்க ஏதோ ஒன்று அவசியமாயுள்ளது. 54''நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் (அது பதறலின் காரணமாக உண்டானது) மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது'' என்று யாக்கோபு 5:16-ல் நாம் காண்கிறோம். உத்தமமான ஒரு மனிதன் ஆத்துமாவில் பிரயாணம் செய்யும் போது (Soul Travel) அல்லது ஆத்துமாவில் வேதனைப்படும் போது (Soul Travail)(பிரயாணம் என்பது வேதனையை விட சிறந்த சொல் என்று எண்ணுகிறேன். நீங்கள் எதை வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளுங்கள்) ஒரு ஆத்துமா பதறல் கொண்டு வேதனைப்படும்போது, அவன் அடையாளத்தைக் காண்பித்து ஏறெடுக்கும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. பாருங்கள்? 55யாக்கோபு 5:16-ல், ''உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிடுங்கள்'' என்று வேதம் கூறுவதைக் கவனியுங்கள் - ஒருவருக்கொருவர் குற்றங்களை அறிக்கையிட்டு சரி செய்து கொள்ளுங்கள் அப்பொழுது குற்றம் எதுவுமிராது. பின்பு ஒருவருக்கொருவர் ஜெபம் பண்ணுங்கள்... அதுதான். அன்பு எனக்கு தன்னம்பிக்கை அளிக்கின்றது. அப்பொழுது என் குற்றங்களை என்னால் உங்களிடம் அறிக்கை செய்ய முடியும். உங்கள் குற்றங்களை உங்களால் என்னிடம் அறிக்கை செய்ய முடிகின்றது. உங்களுக்காக ஜெபம் செய்ய உங்களை நான் போதிய அளவு சிநேகிக்கிறேன். நீங்களும் எனக்காக ஜெபம் செய்கிறீர்கள். பதில் கிடைக்கும் வரை நாம் ஊக்கமான வேண்டுதலில் நிலைத்திருக்கிறோம். அதுதான் பதறும் நிலை. அந்நிலையில் தான் நாம் எப்பொழுது இருக்கவேண்டும். 56கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு வேதத்தில் காணப்படும் சில உதாரணங்களைப் பார்ப்போம். தொடக்கத்தில் யாக்கோபு விசாரமற்ற ஒருவனாக இருந்தான். சேஷ்டபுத்திரபாகம் அவனுக்கு மிகவும் முக்கியமானது என்று அவன் மனதில் எண்ணம் கொண்டான். அதை எந்த வழியிலாகிலும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று அவன் முயன்றான். அதைப் பெற்றுக் கொண்ட பின்னர் எல்லாமே சரியாயிற்று என்று அவன் நினைத்தான். ஏசா மான் வேட்டையாடிவிட்டு களைப்பாக வந்தான். அவனுக்கு அதிக பசி உண்டாயிற்று. ஒரு பெரிய பானை நிறைய கூழ் அவனுக்கு தேவைப்பட்டது. அதைக் கண்டபோது, நாள் முழுவதும் நடந்து களைத்துப்போய் பசியுற்றிருக்கும் ஒரு மனிதனுக்கு மிகவும் சோதனையாக இருந்திருக்கும் அவன் தன் சகோதரனாகிய யாக்கோபிடம், ''நான் மயக்க நிலையில் இருக்கிறேன். இதில் எனக்குக் கொஞ்சம் தா“ என்று கெஞ்சினான். யாக்கோபு, ''நீ எனக்கு சேஷ்ட புத்திர பாகத்தைத் தருவதாக ஆணையிட்டுக் கொடுத்தால் நான் தருவேன்'' என்றான். பாருங்கள்? எந்த வழியில் அதைப் பெற்றாலும் அவனுக்குக் கவலையில்லை. எனவே அவன் அதைப் பெற்றுக் கொண்டான். சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற்றுக் கொண்ட பின்பு எல்லாமே முடிவுற்றது என்று அவன் நினைத்தான். (சகோ. பிரான்ஹாம் பீடத்தை நான்கு முறை தட்டுகிறார் - ஆசி). 57பெந்தெகொஸ்தேயினரே, அங்குதான் நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள். தேவனுடைய ஆவியினால் நீங்கள் மறுபடியும் பிறந்துவிட்டீர்கள். சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற்றுக் கொண்டீர்கள் என்பதால் எல்லாமே முடிவுற்றது என்று எண்ணம் கொண்டீர்கள். அது தொடக்கம் தான். அது தொடக்கம் தான். “அவருக்குச் செவி கொடுங்கள்” என்னும் செய்தி உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்த பிறகு அது மகனாக வளர்கிறது. அதற்கு பிறப்புரிமை உண்டு. ஆனால் குழந்தையிலிருந்து அது பயிற்சி பெற்று, நிரூபிக்கப்பட வேண்டியதாயுள்ளது. அவன் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாதவன் என்று நிரூபிக்கப்பட்டால், அவன் சுதந்தரவாளியாக முடியாது. தகப்பனுடைய வேலையில் அவன் சிரத்தை காண்பிக்காமல் போனால் அவன் சுதந்தரவாளியாக முடியாது. அது போன்று, பரிசுத்த ஆவி பெந்தெகொஸ்தே மக்களின் மீது விழுந்த போது, அவர்கள் ஆவியின் வரங்கள் போன்றவைகளை மீண்டும் பெற்றுக் கொண்டனர். அவர்கள் ஆவியினால் மறுபடியும் பிறந்த காரணத்தால், எல்லாம் முடிவடைந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டனர். ஆனால் மகன் அவனுடைய ஸ்தானத்தில் பொருத்தப்பட வேண்டியவனாயிருக்கிறான். அவன் தகப்பனுக்கு உண்மையாயிருப்பான் என்று நிரூபிக்கப்பட்ட பின்னர், அவன் பொதுவான ஸ்தலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவனுடைய அங்கி கழற்றப்பட்டு, வேறொரு அங்கி அவனுக்கு உடுத்துவிக்கப்படும், அதன் பின்னரே அவன் மகனாக நியமிக்கப்பட்டு அவன் தகப்பன் பெற்றுள்ள அனைத்திற்கும் சுதந்திரவாளியாகிறான். 58தேவன் அதைதான் தமது குமாரனுக்கு மறுரூப மலையின் மேல் செய்தார். அவர் ஒரு மேகத்தினால் நிழலிடப்பட்டு மறுரூபமானார். அவருடைய வஸ்திரம் சூரியனைப் போல் வெண்மையாயிற்று. ஒரு சத்தம், “இவர் என்னுடைய நேசக் குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன். மோசேயும் நியாயப்பிரமாணமும் தவறின. இதுதான் இவர். இவருக்குச் செவி கொடுங்கள்'' என்றது. அவர் குமாரன் ஸ்தானத்தில் நியமிக்கப்பட்டார். பாருங்கள்? 59சேஷ்ட புத்திர பாகத்தைப் பெற்றுக் கொண்டதனால் எல்லாமே முடிந்துவிட்டது என்று யாக்கோபு கருதினான். பெந்தெகொஸ்தே மக்களும் அவ்வாறே கருதி, தங்களை ஸ்தாபித்துக் கொள்ள ஆரம்பித்தனர். ஒருத்துவம், திரித்துவம் போன்ற எல்லா வித ஸ்தாபனங்களும் உண்டாகி, ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டு, அதன் மூலம் அவர்களிடம் 'அடையாளம்' (Token) காணப்படவில்லை என்பதை நிரூபித்தனர். அவர்களிடையே குரோதம், விரோதம் சண்டை... பாருங்கள்? அவர்கள் அங்குதான் சென்றுவிட்டனர். யாக்கோபு அப்படித்தான் நினைத்தான். ஆனால் அவனுடைய ஜீவனைக் குறித்த பயம் ஓரிரவு அவனுக்குள் குடி கொண்டது அவன் பதறல் கொண்டான். “என்னைக் கொன்று போட ஆற்றின் அக்கரையில் என் சகோதரன் காத்துக் கொண்டிருக்கிறான்” என்னும் நினைவு அவனைக் கலங்கடித்தது. அவன் பெற்றுக் கொண்ட அந்த சேஷ்ட புத்திரபாகமே. அவன் உயிரிழக்க காரணமாயிருக்கும் போலிருந்தது. அவ்வாறே, நீங்கள் எந்த பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு மறுபடியும் பிறந்தீர்களோ, நீங்கள் கவனமாயிராமற் போனால், அதே பரிசுத்த ஆவி உங்களை முடிவில் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தும். அது உண்மை. நோவாவைக் காப்பாற்றின அதே தண்ணீர்தான் உலகத்தை நியாயந்தீர்த்தது. நீங்கள் 'மத வைராக்கியம்' (Fanaticism) என்றழைக்கும் அதுவே உங்களை உங்கள் வாழ்க்கையின் இறுதியில் குற்றப்படுத்தும். 60அவன் வாழ்க்கை முடிவடையப் போகிறது என்று யாக்கோபு அறிந்தான். அவன் சகோதரன் அவனைச் சந்திக்க நானூறு ஆட்களுடன் புறப்பட்டு வருகிறான் என்னும் செய்தியை ஒருவன் கொண்டு வந்தான். திகில் அவனைச் சூழ்ந்தது. அவன் ஒரு மனிதனை காளைகளுடனும், ஆடுமாடுகளுடனும் முன்னால் அனுப்பி, அவனுடைய சகோதரன் ஏசாவுக்கு சமாதான காணிக்கையளிக்க விரும்பினான். அதன்பின்பு அவன் குழுக்களை ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பி, அவன் கோபத்தைத் தணிக்க முயன்றான். “இவையாவும் அவன் கோபத்தைத் தணிக்காது. ஒருக்கால் அவன் என்னைக் காட்டிலும் ஐசுவரியவானாயிருக்கலாம். இதெல்லாம் அவனுக்குத் தேவையிருக்காது” என்றும் அவன் நினைத்தான். அவன் தனது மனைவிகளையும் பிள்ளைகளையும் ஏசா காணும்படி முன்னால் அனுப்பினான்; நிச்சயமாக ஏசா தன் மருமக்களைக் கொல்லமாட்டானென்று நினைத்தான். இருப்பினும் அவனால் ஒன்றும் முடியவில்லை. ஒரு மனிதனை எப்படி பிடிக்க வேண்டுமென்று தேவனுக்கு தெரியும். யாக்கோபு ஆற்றைக் கடந்தான். அங்கு அவன் முழங்காற்படியிட்டான். அதற்கு முன்பு சற்று நாணமுள்ளவனாக இருந்தான். 'யாக்கோபு' என்பதற்கு 'எத்தன்' என்று பொருள்; அவன் எத்தனாக இருந்தான். ஆனால் ஏதோ ஒன்று அவனுக்கு சம்பவிக்க வேண்டியதாயிருந்தது. அவனுக்கு முன்பாக மரணம் படுத்துக்கிடப்பதை அவன் கண்ட போது, அவன் பதறினான். 61இங்கு அமர்ந்திருக்கும் அநேக ஆண்கள், பெண்கள் முன்னிலையில் மரணம் ஒருக்கால் படுத்துக் கிடக்கலாம். அதை அகற்ற வேண்டுமானால், அதற்கான ஒரே வழி பதறல் கொண்டு அவரிடம் வருதலேயாகும். “இன்றிரவு அதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும். இப்பொழுதே பெறவேண்டும். இல்லையேல் எனக்கு விமோசனம் இல்லை”. நாளை என்றால் தாமதமாகியிருக்கும். இப்பொழுதே அதை நான் பெற்றுக் கொள்ளவேண்டும் நீங்கள் அடையாளமாகிய பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காக ஜெபம் செய்யும்போது, “ஆண்டவரே, நான் சென்று முயற்சி செய்வேன். ஆனால் எனக்கு சிறிது களைப்பாயுள்ளது” என்று கூறாதீர்கள். அப்படியானால் நீங்கள் உங்கள் இருக்கையிலேயே அமர்ந்து கொண்டு. எவ்வித முயற்சியும் செய்ய வேண்டாம். ''நான் ஜெப வரிசையில் சென்று எண்ணெயை என் தலையில் பூசிக் கொள்வேன். அதனால் ஏதாவது உபயோகமுண்டா என்று பார்க்கலாம்'' என்று கூறுவீர்களானால் அந்த பதறும் நிலைக்கு வரும் வரைக்கும் உங்கள் இருக்கைகளிலேயே அமர்ந்திருப்பது நல்லது. மரணத்துக்கும் ஜீவனுக்குமிடையேயுள்ள அந்த பதறும் நிலைக்கு முழு சபையுமே வரவேண்டும். இப்பொழுதே பெற்றுக் கொள்ள வேண்டும்; இல்லையேல் மடிந்து போக வேண்டும் என்னும் நிலைக்கு நீங்கள் வரும் போது, தேவன் அங்கு வந்து கிரியை செய்கிறார். தேவனை அங்கு கொண்டு வருவதற்கு பதறல் அவசியமாயுள்ளது. 62யாக்கோபு என்றும் இல்லாத அளவுக்கு கதறினான். அவன் தேவனைப் பிடித்துக் கொள்ளும் வரை, அவனுடைய கலக்க நிலையில்அவரை கூப்பிட்டான். பதினைந்து நிமிடங்கள் மாத்திரம் அவன் அவருடன் போராடவில்லை; அவரைத் தன் ஆத்துமாவில் இருத்திக் கொள்ள அன்றிரவு முழுவதும் அவருடன் போராடினான். அப்படி செய்தும் கூட அவன் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றுணர்ந்தான். ஆசீர்வாதம் பெறும் வரை அவன் அவரை இறுகப் பற்றிக் கொண்டான்; அதுவரை அவன் அவருடன் தீவிரமாய் போராடினான். கர்த்தர் அங்கு வந்தார். அவன், ''நான் உம்மைப் போகவிடமாட்டேன்'' என்று கலக்க நிலையில் அவரிடம் கூறினான். அப்பொழுது அவன் மேல் ஆசீர்வாதம் இறங்குவதை அவன் உணர்ந்தான்... அநேகர், “தேவனுக்கு மகிமை, நான் இப்பொழுது பெற்றுக் கொண்டுவிட்டேன்'' என்கின்றனர். நீங்கள் அங்குதான் ஏமாந்துவிட்டீர்கள் ஆமாம்! சிலர் சகோ. பிரான்ஹாமே, “எனக்கு நல்லுணர்வு தோன்றுகிறது. நான் அங்கு ஜெபித்தேன். ஒரு நடுக்க உணர்ச்சி எனக்குள் தோன்றினது...'' என்கின்றனர். ஒருக்கால் அது தேவனாயிருக்கலாம். ”எனக்கு முன்னால் ஒரு பெரிய வெளிச்சத்தைக் கண்டேன்'' எனலாம். அதுவும் ஒருக்கால் தேவனாயிருக்கலாம். ஆனால் அதைக் குறித்து இப்பொழுது நான் கூற வரவில்லை. 63எபிரேயர் 6-ம் அதிகாரத்தில் வேதம், “மழை நீதியுள்ளவர் மேலும் அநீதியுள்ளவர் மேலும் பொழிகின்றது'' என்று கூறுகிறது (மத்.5:45 - தமிழாக்கியோன்). (சகோ. பிரான்ஹாம் பீடத்தை ஏழு முறை தட்டுகிறார் - ஆசி) நீங்கள் கோதுமையையும் களையையும் வயலில் வையுங்கள். உண்மையில் மழை கோதுமைக்காகவே அனுப்பப்படுகின்றது. ஆனால் அது களைகளின் மேலும் விழுகின்றது, மழை பெற்றதனால், கோதுமை பயிர் போலவே களைகளும் மகிழ்ச்சியடைகின்றன. அதே பரிசுத்த ஆவி அவிசுவாசியின் மேலும் விழுந்து, விசுவாசியைப் போலவே அவனை நடக்கச் செய்யும். ஆனால் அவர்களுடைய கனிகளினால் அவர்கள் அறியப்படுகின்றனர். அதைக் குறித்துதான் நான் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறேன்; அதுதான் 'அடையாளம்' (Token) 64யாக்கோபு பதறல் கொண்டு, ''நான் உம்மைத் தொட்டு உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். நீர் என்னோடு இருக்கிறீர். ஆனாலும் நான் உம்மைப் போகவிடமாட்டேன்“ என்றான். சிலர் முதல் உணர்ச்சி தோன்றினவுடனே நல்லது என்று நினைத்து, மேலும் கீழும் குதித்து, பீடத்திற்குச் செல்லும் வழியில் ஓடி, ''நான் பெற்றுக் கொண்டேன். நான் பெற்றுக் கொண்டேன்'' என்கின்றனர். ஓ, இல்லை, இல்லை! அவனை வித்தியாசமான ஆளாக்க ஏதோ ஒன்று நிகழும் வரைக்கும் அவன் அதிலே நிலைத்திருந்தான். அவன் மேற்கொள்ளும் வரை அதில் நிலை நின்றான் என்பதாக வேதம் கூறுகின்றது. ஒரு மனிதன் எங்ஙனம் தேவனை மேற் கொள்ள முடியும்? உங்களால் முடியும். உங்களால் முடியும். ஒரு மனிதன் தேவனை மேற்கொள்ள முடியும். 65ஒரு சமயம் எசேக்கியா என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் இருந்தான். தீர்க்கதரிசி அவனிடம் வந்து, ''கர்த்தர் உரைக்கிறதாவது: நீ மரிக்கப் போகின்றாய் என்று கூறினான். எசேக்கியா தன் முகத்தை சுவற்றின் பக்கம் திருப்பி, பதறல் கொண்டு “ஆண்டவரே, என் மேல் கிருபையாயிரும். உத்தம் இருதயத்துடன் உமக்கு முன்னால் இத்தனை நாட்களாக நான் நடந்து வந்தேன். எனக்கு இன்னமும் பதினைந்து ஆண்டுகள் தேவை'' என்றான் அவன் மரிக்கப் போகின்றான் என்று தேவன் கூறின பிறகும், அவனுடைய பதறல் காரணமாக தேவனுடைய திட்டத்தை அவன் மாற்றிவிட்டான் அவன் துயரமடைந்து, மனங்கசந்து அழுதான். 66ஆசீர்வாதம் கிடைத்து, அவனுடைய பெயர் 'எத்தன்' என்பதிலிருந்து 'தேவனுடைய அரசகுமாரன்' (Prince with God) என்று மாறும் வரைக்கும், யாக்கோபு அங்கேயே நின்றான். ஒரு தேசமே அவனுடைய பெயரால் அழைக்கப்பட்டது. ஆம் ஐயா. அது என்ன? அதைக் குறித்து அவன் பதறல் கொண்ட விளைவால் இவ்விதம் நடந்தது. அடுத்த நாள் ஏசாவை சந்தித்த போது, அவனுக்கு காப்பாளர் தேவைப்படவில்லை? அவன் நேராக நடந்து அவனைச் சந்தித்தான். பாருங்கள்? (தேவனிடத்திலிருந்து) உறுதி பெறும் வரைக்கும் அவன் பதறல் கொண்டான். நீங்களும் அவ்வாறே அவரிடமிருந்து உறுதி பெரும் வரைக்கும் பதறல் கொள்ள வேண்டும். இல்லையாயின், ஜெபித்துக் கொள்ளும் படிக்கு கூட வர வேண்டாம்; பீடத்தினருகில் நீங்கள் வரவே வேண்டாம். அது மரணத்துக்கும் ஜீவனுக்கும் இடையேயுள்ள ஒன்று என்னும் உணர்வு வரும்வரை காத்திருங்கள். நிச்சயமாக! பதறல் நிலை. 67ரூத் நகோமியின் பக்கத்தில் ஒரு சமயம் நின்று கொண்டிருந்த போது பதறல் கொண்டாள். அவள் தன் ஜனங்களிடம் சென்று அவளுடைய தேவர்களைச் சேவிக்க வேண்டுமா? அவள் என்ன செய்ய வேண்டும்? அவள் பதறல் கொண்டு நகோமியிடம், ''நீர் போகுமிடத்திற்கு நானும் வருவேன். நீர் தங்குமிடத்தில் நானும் தங்குவேன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரண மடைந்து, அங்கே அடக்கம் பண்ணப்படுவேன். உம்முடைய தேவன் என்னுடைய தேவன்'' என்றாள் (ரூத்.1:16-17). அங்கு பாருங்கள், அவள் கலக்க நிலையையடைந்தாள். தேவன் அவளை ஆசீர்வதித்து, அவளுக்கு ஓபேத் என்னும் மகனைத் தந்தார். ஓபேத் ஈசாயைப் பெற்றான். ஈசாயின் சந்ததியில் இயேசு தோன்றினார். பதறல் நிலையே அதற்குக் காரணம். அந்த வேசி ராகாபும் பதறல் கொண்டாள். அவளுக்கு முன்னால் மரணம் படுத்துக் கிடந்தது என்பதை அவள் உணர்ந்தாள். அவள் நியாயத்தீர்ப்பின் கீழ் இருந்தாள். அவள் பதறல் கொண்டு, ''உங்கள் வேவுகாரரை நான் ஒளித்து வைக்கிறேன். என்ன வேண்டுமானாலும் நான் செய்கிறேன். என் வீட்டார் அழிக்கப்படுவதில்லையென்று உங்கள் தேவன் பேரில் ஆணையிட்டுக் கொடுங்கள் என்றாள். அவன், “இந்த அடையாளத்தை நீ வாசலில் தொங்கவிட்டால், அந்தப்படியே ஆகும்'' என்று உறுதி கூறினான். 68ஈசாக்குக்கு பெண் தேடும்படியான பொறுப்பு எலியேசர் மேல் சுமத்தப்பட்ட போது, அவன் பதறல் கொண்டான். தமஸ்குவைச் சேர்ந்த எலியசேர் ஒரு பெரிய மனிதன். அவனுக்கு ஆபிரகாமின் கண்களில் தயவு கிடைத்திருந்தது. தன் குமாரனாகிய ஈசாக்குக்கு ஒரு பொருத்தமான பெண்ணைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு ஆபிரகாம் அவன் மேல் போதிய விசுவாசம் வைத்திருந்தான். அந்த வம்சத்தின் வழியாய் கிறிஸ்து இவ்வுலகில் தோன்ற வேண்டியிருந்தது. எலியேசர் ஆவிக்குரிய மனிதனானபடியால், அதன் அர்த்தத்தை அவன் விளங்கிக் கொண்டான். ஒரு ஏற்ற பெண்தான் ஈசாக்குக்கு மனைவியாயிருக்க வேண்டும். அந்தப் பெண்ணை அவன் எங்ஙனம் தேர்ந்தெடுப்பான்? பதறும் நிலையிலே அவன் பட்டணத்துக்குள் பிரவேசித்த போது, “தேவனாகிய கர்த்தாவே...'' என்று அவன் ஜெபித்தான். அதுதான் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது. பதறும் நிலைக்கு நீங்கள் வரும் போது ஜெபம் - செய்யுங்கள். அவன் ”தேவனாகிய கர்த்தாவே, எந்தப் பெண் முதலில் என் ஒட்டகங்களுக்கு தண்ணீர் வார்த்து எனக்கும் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறாளோ, அவளே அந்த பெண்“ என்று ஜெபித்தான். அவன் பதறல் கொண்டு ஜெபித்தான். 69அந்த அழகான பெண், ரெபேக்காள், அங்கு வந்து ஒட்டகத்திற்கு தண்ணீர் வார்த்தாள். அதன் பின்பு (எலியேசர்) “என்னைத் தாமதப்படுத்த வேண்டாம்'' என்றான். அவள் அவனுடன் போவாளோ மாட்டாளோ என்னும் தீர்மானம் செய்ய வேண்டிய நேரத்தையடைந்தாள். அவள் மணவாட்டிக்கு முன்னடையாளமாகத் திகழ்கின்றாள். அவள் சென்று, இதற்கு முன்பு அவள் கண்டிராத ஒருவனை விவாகம் செய்து கொள்வாளா? அது ஒரு மகத்தான செயல், அவள் அவனைக் கண்டதேயில்லை. அவனைக் குறித்து அவனுடைய ஊழியக்காரனின் மூலமே அவள் கேள்விப்பட்டிருந்தாள். அவள் மணவாட்டிக்கு முன்னடையாளமாயிருக்கிறாள். நீங்கள் கிறிஸ்துவைப் பார்த்ததில்லை. அவரைக் குறித்து நீங்கள் அவருடைய ஊழியக்காரரின் மூலம் கேள்விப்படுகின்றீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு, உங்கள் வீடுகளை விட்டு, அவரைக் காணச் செல்கின்றீர்கள். இப்பொழுது கவனியுங்கள். அவள் ஒரு தீர்மானம் செய்தாள். மணவாட்டிக்கு முன்னடையாளம் - அவள் ஸ்தாபன வீட்டை விட்டு புறப்பட்டுச் சென்றாள். 70புயல் வந்தபோது, யோனா, கப்பலிலிருந்து சமுத்திரத்தில் எறியப்பட்டான். சமுத்திரத்தின் ஆழத்தில் அவன் ஒரு பெரிய மீனின் வயிற்றினுள் சென்றான். அவன் பிழைப்பான் என்னும் நம்பிக்கை அற்றுப்போனது, சாலொமோன் ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்த போது, “ஆண்டவரே, உம்முடைய ஜனத்திற்கு எங்காகிலும் கஷ்டம் நேர்ந்து, அவர்கள் இந்த ஆலயத்திற்கு நேராக விண்ணப்பம் செய்தால் அதைக் கேட்டருளும்'' என்று அவன் செய்த ஜெபம் யோனாவின் ஞாபகத்திற்கு வந்தது. அவன் மீனின் வயிற்றில் புரண்டு, எப்படியோ முழங்காற்படியிட்டான். மீனின் வயிற்றிலிருந்த அசுத்தம் அவன் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். அவன் பதறல் கொண்டு ஜெபம் செய்தான்... மீனின் வயிற்றில் அவனுக்குச் சிறிது பிராணவாயு மாத்திரமே இருந்திருக்கும். அவன் சுவாசித்த ஒரு சில மூச்சுகளுடனே கூட ஜெபத்தை ஏறெடுத்தான். அவன் எந்த திசையை நோக்கியிருந்தான் என்று ஒருக்கால் அறிந்திருக்க மாட்டான். ஆயினும் அவன், ”ஆண்டவரே, நான் ஆலயத்தைத் தான் நோக்கிக் கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன்'' என்று கூறினான். சுவாசிக்க இன்னும் சிறிது பிராணவாயு மாத்திரமே இருந்த அந்த பதறல் நிலையில் அவன் ஜெபம் செய்தான். அவனுடைய விண்ணப்பத்தைக் கேட்டு கர்த்தர் மூன்று நாட்கள் இரவும் பகலும் அவனை உயிரோடே வைத்து அவன் செய்தியளிக்க வேண்டிய இடத்தில் அவனை விடுவித்தார். பதறும் நிலை. 71அன்னாள் என்னும் மலடியைக் குறித்து வேதத்தில் கூறப்பட்டுள்ளது, அவளுக்கு ஒரு மகன் வேண்டுமென்று விரும்பினாள் ஆலயத்தின் ஆசாரியனும் கூட அவள் குடித்து வெறித்திருக்கிறாள் என்று கருதும் அளவிற்கு அவள் உபவாசித்து ஜெபம் செய்தாள். அவள் அத்தகைய பதறல் கொண்டாள். மற்றுள்ள பெண்கள் அந்தப் பெண் என்ன தொப்பி அணிந்திருக்கிறாள் என்றும் வேறொருத்தி என்ன உடையுடுத்திருக்கிறாள் என்றும் கவனித்துக் (அது என்னவென்று உங்களுக்குத் தெரியும்). பண்ணையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அளவளாவிக் கொண்டிருந்தனர். ஆனால் அன்னாள் அப்படியில்லை. அவள் கூட்டத்தின் வழியாக கடந்துவந்து, நேராக பீடத்திற்குச் சென்றாள். அவள் அத்தனை நாட்களாக உபவாசித்துக் கொண்டிருந்தாள். அவள் பேரிலுள்ள நிந்தை நீங்க வேண்டுமென்று அவள் விரும்பினாள். இன்றைக்கு காரியம் எவ்வளவு வித்தியாசமாயுள்ளது! இக்காலத்தில் குழந்தை பெறுவது என்பது நிந்தையாகக் கருதப்படுகின்றது. ஆனால் அக்காலத்திலோ குழந்தை இல்லாதது நிந்தையாகும். அவள் முழங்காற்படியிட்டு, ஜெபம் செய்தாள். அவள் ஆலயத்தின் மதிப்பையோ அல்லது ஆசாரியனின் மதிப்பையோ கவனிக்கவில்லை. அவள் அதிக துயரப்பட்டு, கண்ணீர் அவள் கன்னங்களின் வழியாய் வழிந்தோடியது. அவள் பதறல் கொண்டு, “தேவனாகிய கர்த்தாவே எனக்கு ஒரு மகனைத் தாரும், எனக்கு ஒரு மகனைத் தாரும்'' என்று அழுது கொண்டிருந்தாள். 72கவனியுங்கள், அவள் சுய நலம் கொண்டவளல்ல, கர்த்தர் அவள் விண்ணப்பத்தைக் கேட்டு, பதிலளித்து, ஒரு குமாரனைத் தந்தபோது, அவள் அவனை தேவனுக்கே திரும்பக் கொடுத்துவிட்டாள். அவளுடைய ஜெபத்தை தேவன் கேட்ட பின்பு, அவள் சுயநலம் கொள்ள விரும்பவில்லை. எனவே, அவர் அவளுக்கு ஒரு தீர்க்கதரிசியைக் கொடுத்தார். அது அவளுக்கு அளிக்கப்பட்ட கூடுதல் ஆசீர்வாதம். ஓ, இவர் இத்தகைய கூடுதல் ஆசீர்வாதங்களை நிறையத் தருகிறார். ஒரு குமாரனை மாத்திரமல்ல, ஒரு தீர்க்கதரிசியையும் அவர் அளித்தார். இஸ்ரவேலிலே அநேக ஆண்டுகளாக பிரத்தியட்சமான தரிசனம் இல்லாமலிருந்தது. அநேக ஆண்டுகள் கழித்து, சாமுவேல் முதல் தீர்க்கதரிசியாக தோன்றினான். இதற்குக் காரணம், ஒரு தாயார் பதறல் கொண்டு, குழந்தைக்காக வேண்டினாள். குழந்தை பெறக்கூடிய பருவத்தை அவள் கடந்துவிட்டிருந்தாள். ஒருக்கால் அவளுக்கு அப்பொழுது எழுபது வயது இருந்திருக்கலாம் அவள் பதறிப்போய் ஜெபம் செய்தாள். அவளுக்கு அந்த குழந்தை எப்படியாயினும் வேண்டியதாயிருந்தது. அது என்ன? கர்த்தர் அவளுடன் பேசினார் என்பதில் சந்தேகமில்லை. கர்த்தர் உங்களுடன் பேசும் வரைக்கும் நீங்கள் பதறல் கொள்ள முடியாது. ஓ, சபையே, எழும்பி உன்னை அசைத்துக் கொள்! உன் மனசாட்சி உன்னை குத்தட்டும். இந்த மணி நேரத்தில் உறக்கத்தினின்று எழு! நாம் பதறல் கொள்ள வேண்டும். இல்லையேல் அழிந்து போக வேண்டும்! ஏதோ ஒன்று தேவனிடத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது. “அது கர்த்தர் உரைக்கிறதாவது'' என்றறிவேன். ஏதோ ஒன்று வந்து கொண்டிருக்கிறது. நாம் பதறல் கொள்வது நல்லது. அது மரணத்திற்கும் ஜீவனுக்குமிடையே உள்ள ஒன்று. அது நம் மத்தியில் கடந்து செல்லும், நாம் அதை காணமாட்டோம். அவள் சுயநலமில்லாதவளாய் இருந்த காரணத்தால் அவளுக்கு ஒரு தீர்க்கதரிசி அளிக்கப்பட்டான். 73சூனேமியாளும் அவளது கணவனும் வயது சென்றவர்களாய் இருந்த போதிலும், தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தையை உரைத்ததன் விளைவாக அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவர்களுக்கு குழந்தையில்லாமல் இருந்தது. அவளோ தீர்க்கதரிசியிடம் தயவாய் நடந்து கொண்டாள். அவன் தேவனுடைய மனிதன் என்பதை அவள் அறிந்திருந்தாள். அவன் கெளரவமும் உத்தமுமான மனிதன் என்பதை அவள் உணர்ந்தாள். அவளுடைய கணவன் வீட்டில் இல்லாத போதும், இந்த மனிதன் வீட்டில் வருவது வழக்கம். அவன் ஒரு பரிசுத்தமுள்ள மனிதன், அவன் நல்நடத்தையுள்ளவன் என்று இருவருமே அறிந்திருந்தனர். அவன் அற்புதங்களும் அடையாளங்களும் செய்து வந்ததை அவள் கண்டிருக்கிறாள். அவன் முன்னுரைத்தவை அனைத்தும் நிறைவேறினதையும் அவள் அறிந்திருந்தாள் அவன் கெளரவமும், பரிசுத்தமுமான மனிதன், அவள் கணவனிடம், ''நம்முடன் தங்கும் இந்த மனிதன் பரிசுத்தமுள்ளவர் என்பதை அறிவேன்'' என்றாள். வீட்டின் தலைவி, அவள் பரிசுத்தமுள்ளவன்; என்பதை அறிந்திருந்தாள். அவனுக்கு தொந்தரவு எதுவும் ஏற்படக் கூடாது என்பதற்காக, அவள் சிறு வீட்டை அவன் தங்குவதற்காகக் கட்டினாள். அவன் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து போகலாம். அங்கு அவள் ஒரு சிறு படுக்கையையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் வைத்திருந்தாள். வேண்டும் போது அவன் கை கால் கழுவி தண்ணீர் குடிக்கலாம். அவனுக்கு உணவு அனுப்ப, அவள் ஒருக்கால் ஒரு வேலையாளை அமர்த்தியிருக்கக் கூடும். 74இந்த உபசாரம் அவனுக்கு அளிக்கப்படுவதை எலிசா கண்ட போது... ''இந்த சிறியரில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்'' என்று எழுதப்பட்டுள்ளது. அந்த ஸ்திரீ அவனை கெளரவிப்பதன் மூலம் தேவனை கனப்படுத்துகிறாள் என்பதை அவன் கண்டான். ஏனெனில் அவள் தேவனை தீர்க்கதரிசியில் கண்டாள். அவள் கைமாறாக எதையும் எதிர்பார்க்கவில்லை. எதையும் பெற்றுக் கொள்ள வேண்டுமெனும் விருப்பம் அவள் இருதயத்தில் இல்லை. அவள் தேவனிடத்தில் அன்பு கூர்ந்ததன் நிமித்தமே இதை செய்தாள். ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக அவள் இப்படி செய்யவில்லை அதை வெறுமனே செய்தாள். எலிசா, “அவளுக்காக ராஜாவினிடத்தில் அல்லது தளபதியினிடத்தில் பேசட்டுமா என்று அவர்களிடம் கேள். அவன் எனக்கு நெருங்கிய நண்பன். அவளுக்கு ஏதாவதொரு உதவியை செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். அவள் எனக்கு ஆகாரம் அளித்து, படுக்க இடம் கொடுத்து, என்னிடம் மிகவும் தயவாயிருக்கிறாள். அவளுக்கு நான் என்ன செய்யக்கூடும்'' என்று கேட்டனுப்பினான். அவளோ, ''எனக்கு ஒன்றும் வேண்டாம். என் ஜனங்களின் மத்தியில் நான் தங்கியிருக்கிறேன். நாங்கள் வசதியாயிருக்கிறோம். எங்களுக்கு தங்க ஒரு வீடு இருக்கின்றது. அது போதும். வேறொன்றும் எங்களுக்கு வேண்டாம்'' என்று கூறிவிட்டாள். கேயாசி அவனிடம், “ஆனால் அவளுக்கு குழந்தையில்லை” என்றான். கேயாசி கூறின மாத்திரத்தில் தீர்க்கதரிசி ஒரு தரிசனம் கண்டான். அவன், “கர்த்தர் உரைக்கிறதாவது - ஏற்ற காலத்தில் அதாவது இன்னும் ஒரு ஆண்டுக்குள், அவள் ஒரு குழந்தையைக் கட்டித் தழுவுவாள் என்று அவளிடம் சொல்'' என்றான். 75அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு பன்னிரண்டு வயதானபோது... அந்த வயோதிப தம்பதிகள் அவர்களுக்கு இருந்த இந்த ஒரே மகனை எவ்வளவாய் நேசித்திருப்பார்கள்! ஒரு நாள் அவன் தன் தகப்பனுடைய கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்தபோது - அது நடுப்பகலாயிருந்திருக்கும் - அவனுக்கு வெப்ப வியாதி (Sun Stroke) கண்டிருக்கும் என்று நினைக்கிறேன். அவன், ''என் தலை சுழல்கிறதே“ என்று கதறினான். அவன் மேலும் மேலும் வியாதிப்பட்டான். ஒரு அவசர நிலை அங்கு ஏற்பட்ட காரணத்தால், அவன் தகப்பனார் ஒரு வேலைக்காரனுடன் அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தான். மத்தியானம் வரைக்கும் தாயார் அவனை மடியில் வைத்திருந்தாள். அவன் மரித்துப் போனான். கவனியுங்கள். ஜெபத்தினாலும் தீர்க்கதரிசியின் வாக்குறுதியின் மூலமாகவும், “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதன் மூலமாகவும் அவளுக்கு அளிக்கப்பட்ட ஒரே மகன் மரித்துப் போனான்... எங்கோ தவறுள்ளது என்று அறிந்து கொண்டாள். எவ்வாறு தேவன் ஒரு குழந்தையை அவளுக்களித்து, அவனை அவள் நேசிக்கச் செய்து, பின்பு அவனை எடுத்துக் கொள்ள முடியும் என்னும் கேள்வி அவள் மனதில் எழுந்தது. குழந்தை வேண்டுமென்று அவள் கேட்கவேயில்லை. குழந்தை பெறும் வயதை அவள் கடந்திருந்தாள். தேவனுடைய கரம் இந்த மகத்துவமான செயலைப் புரிந்தது. தீர்க்கதரிசி வார்த்தையை பேசினான், அது நிறைவேறினது. அவளுக்குக் கிடைக்கப் பெற்ற ஒரே மகனோ இப்பொழுது இறந்துவிட்டான். அவள் வேலைக்காரனிடம், “கழுதையின் மேல் சேணம் வைத்து, அதன் மேலேறிச் செல்: எங்கும் நிறுத்த வேண்டாம். யாராகிலும் உன்னை நிறுத்த முயன்றால் ஒரு வார்த்தையும் பேசாதே. நேராக கர்மேல் பர்வதத்திற்கு செல். அங்குள்ள குகை ஒன்றில் சர்வ வல்லமையுள்ள தேவனின் ஊழியக்காரர் இருப்பார். அவர் தான் எனக்குக் குழந்தை பிறக்கும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று என்னிடம் கூறியவர். கர்த்தர் ஏன் இவ்வாறு செய்தார் என்று அறிய விரும்புகிறேன். நேராகச் செல். கழுதையின் வேகத்தை எங்கும் குறைக்க வேண்டாம். அது எவ்வளவு வேகமாகச் செல்லக் கூடுமோ, அவ்வளவு வேகமாக சென்று அந்த இடத்தை அடையட்டும்'' என்றாள் - பதறல் நிலை. 76தீர்க்கதரிசியாகிய எலிசா எழுந்து நின்று பார்த்து, “இதோ சூனேமியாள் வருகிறாள், ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது. தேவன் அதை எனக்கு மறைத்துவிட்டார். அது என்னவென்று தெரியவில்லை என்று கூறிவிட்டு, வேலைக்காரனிடம், ”அவளைச் சந்தித்து வா. நாம் துரிதமாய் செல்வோம். ஏதோ கோளாறு உள்ளது“ என்றான். தீர்க்கதரிசிக்குள்ளும் இந்த பதறல் நிலை தொடங்கியது - ஸ்திரீக்கும் பதறல். இருவரும் சிந்திக்கின்றனர். தேவனுடைய வார்த்தை என்னவென்று ஸ்திரீ அறியவேண்டும்; தேவனுடைய வார்த்தை என்னவென்று தீர்க்கதரிசி அறியாமலிருக்கிறான். ஒருத்தி அதை அறிந்து கொள்ள விரும்புகிறாள். மற்றவன் அது என்னவென்பதை அறியாமலிருக்கிறான். அந்த ஸ்திரீ அதை அறிந்து கொள்ள விரும்பினாள். தீர்க்கதரிசியோ அதை அறிந்து கொள்ளவில்லை. ”தேவன், அதை எனக்கு மறைத்துவிட்டார். அவள் இங்கு வரும்போது அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை'' என்றான். அவன் கூறி முடிப்பதற்கு முன்பே அவள் அங்கு சேர்ந்துவிட்டாள். அவன் கைகளையுயர்த்திய வண்ணமாய், ''நீ சுகமாயிருக்கிறாயா? உன் புருஷன் சுகமாயிருக்கிறானா? உன் மகன் சுகமாயிருக்கிறானா?'' என்று விசாரித்தான் 77அந்த ஸ்திரீ அவளுடைய பதறலின் முடிவை அடைந்துவிட்டாள். அவள், “எல்லோரும் சுகம்தான்” என்று பதிலுரைத்தாள். மகிமை! அவளுடைய பதறல் போய்விட்டது. ஏனெனில் அவள் தேவனுடைய ஊழியக்காரனைக் கண்டுபிடித்துவிட்டாள். அவன் அங்கு இல்லாமல் போயிருந்தால், அவள் இன்னமும் பதறிக் கொண்டேயிருந்திருப்பாள். ஆனால் அவளோ அவனை அங்கு கண்டுவிட்டாள். அவள் ''சுகம் தான்'' என்றாள். எலிசா, “இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று எண்ணினான். அவள் ஓடி வந்து அவன் காலைப் பிடித்துக் கொண்டாள். அது சற்று அசாதாரணமான செயலாயிருந்தது. கேயாசி அவளைத் தூக்கியெடுத்தான். அப்பொழுது அவன் கேயாசியிடம், ''அவளைத் தடுக்காதே. எங்கோ தவறுள்ளது. தேவன் அதை எனக்கு அறிவியாமல் மறைத்து வைத்தார்'' என்றான். அப்பொழுது அவள் பிள்ளை மரித்துவிட்டதாக தெரியப்படுத்தினாள். 78தீர்க்கதரிசிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன், “கேயாசியே, நான் நடக்கும் போது உபயோகப்படுத்தும் இத்தடியை எடுத்துக் கொள்” என்று கூறினான். அவன் தொட்டவை அனைத்தும் ஆசீர்வதிக்கப்பட்டவை என்று அவன் உணர்ந்திருந்தான். ஏனெனில் அது அவனல்ல, அவனுக்குள் வாசம் செய்யும் தேவனாகும், அவன் யாரென்பதை அவன் அறிந்திருந்தான். அவன் தீர்க்கதரிசியென்று அவனுக்குத் தெரியும். எனவே அவன் தடியைக் கையிலெடுத்து, “கேயாசியே, இதைக் கொண்டு போய் பிள்ளையின் மேல் வை. வழியில் யாராகிலும் பேசினால், நீ பதறல் கொள்வாயாக. யாரையும் வழியில் வாழ்த்த வேண்டாம். சென்று கொண்டேயிரு. யாரிடமும் பேச வேண்டாம். அந்த தடியை பிள்ளையின் மேல் வை'' என்றான். ஆனால் அந்த ஸ்திரீயோ - அவளுடைய பதறல் அதன் மூலம் அடங்கவில்லை. அவளுக்கு அது திருப்தியளிக்கவில்லை. அவள் “நீர் வந்து அந்த பிள்ளையைப் பார்க்கும் வரை நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்கிறேன்” என்றாள். எலிசாவும் பதறல் கொண்டு அவளுடன் சென்றான். அவர்கள் அங்கு அடைந்தபோது, எல்லோரும் புலம்பிக் கொண்டிருந்தனர். இந்த ஸ்திரீ மிகவும் சரியான காரியத்தை அங்கு செய்தாள். அவள் பிள்ளையைக் கையிலெடுத்துக் கொண்டு, எலிசா வழக்கமாய் கிடக்கும் கட்டிலில் கிடத்தினாள். அது அவனுடைய தடியைப் போன்றே சக்தி வாய்ந்தது. ஆனால் அவனோ உயிரோடெழவில்லை. அவள் வெவ்வேறு காரியங்களை அறிய விரும்பினாள். 79எலிசா உள்ளே சென்றான். அவன் பதறல் கொண்டான் அவன் என்ன செய்யப் போகின்றான்? அவன் பதறல் கொண்டவனாய் இங்குமங்கும் நடந்தான் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். “ஆண்டவரே, என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்று நீர் அந்த ஸ்திரீயிடம் கூறச் சொன்னீர். நான் கூறின விதமாகவே அது நிறைவேறினது. ஏனெனில் நீர் என்னுடன் அவ்விதமாக உரைத்தீர். இப்பொழுது அவள் துன்பத்திலிருக்கிறாள். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. அந்த பையன் அதோ அங்கே மரித்து கிடக்கிறான். ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று பதறினான். அப்பொழுது பரிசுத்தாவியானவர், “தேவன் உனக்குள் வாசம் செய்வது உண்மையானால், அந்த பிள்ளையின் மேல் படுத்துக் கொள்” என்று கூறியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவன் இங்குமங்கும் நடப்பதை நிறுத்தி விட்டு, பிள்ளையினருகில் சென்று, அவனுடைய கைகள் பிள்ளையின் கைகள் மேலும், அவனுடைய மூக்கு பிள்ளையின் மூக்கு மேலும், அவனுடைய உதடுகள் பிள்ளையின் உதடுகள் மேலும் படும்படியாக அவன் மேல் குப்புறப்படுத்துக் கொண்டான். அப்பொழுது அந்த பிள்ளை ஏழு தரம் தும்பினது. அப்பொழுது பதறல் தணிந்தது. பிள்ளை உயிர்பெற்றது. பதறல் ஸ்திரீயை தீர்க்கதரிசியிடம் கொண்டு சென்றது. அதே பதறல் தீர்க்கதரிசியை பிள்ளையிடம் கொண்டு வந்தது. அவர்களிருவரிலும் காணப்பட்ட பதறல் தேவனை அங்கு இழுத்துக் கொண்டு வந்தது. தேவன் தமது பிள்ளைகளின் பேரில் வைத்திருக்கும் அன்பு அங்கு இழுத்து கொணரப்பட்டு, போர்க் களத்தில் விசுவாசத்தையளித்தது. அப்பொழுது கிரியை முடிவு பெற்றது. அந்த வியாஜ்ஜியம் முடிந்துவிட்டது. ஆமென்! அதுதான், பதறல் கிரியை செய்யத் தூண்டுகிறது. நிச்சயமாக! அவள் அவனை விடவில்லை. 80குருடனான பர்த்திமேயு அந்த வாசலில் உட்கார்ந்து கொண்டு பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். இயேசு அந்த வழியே போகவிருக்கிறார் என்பதை அவன் அறிந்து கொண்டான். அவன் முதலில் ஒரு சத்தத்தைக் கேட்டான். இயேசு அவ்வழியே கடந்து சென்று கொண்டிருந்தார். “யார் கடந்து செல்கின்றது?'' என்று அவன் கேட்டான். யாரோ ஒருவர் அவனைக் கீழே தள்ளி உட்கார வைத்தார். அவனோ, ”யார் கடந்து செல்லுகின்றது என்பதை தயவு செய்து தெரியப்படுத்தவும்'' என்று கெஞ்சினான். அப்பொழுது ஒரு பெண் - அவருடைய சீஷப் பெண்மணி ஒருத்தியாக இருக்கக் கூடும் - “யார் கடந்து செல்கின்றது என்று தெரியவில்லையா?” என்று கேட்டிருப்பாள். அவன், இல்லை, யாரோ ஒருவர், “கல்லறை முழுவதும் பிணக் குவியலாக இருக்கிறதே. நீர் மரித்தோரை உயிரோடெழுப்பினது உண்மையானால், அங்கு சென்று அவர்களை உயிரோடெழுப்பும் என்று சொல்லக் கேட்டேன். அது யார்? தேவதூஷணக்காரனா?'' என்று கேட்டான். அவள், ''நசரேயனாகிய இயேசு என்றழைக்கப்படும் அந்த வாலிப தீர்க்கதரிசியைக் குறித்து நீ கேள்விப்பட்டிருக்கிறாயா? அவர் கலிலேயாவிலிருந்து வரும் தீர்க்கதரிசி'' என்றாள். அவன், ''இல்லை'' என்று பதிலளித்தான். ''நமது வேதத்திலும், புத்தகச் சுருளிலும், தாவீதின் குமாரன் தோன்றி சிங்காசனத்தில் வீற்றிருப்பார் என்று எழுதப்பட்டுள்ளதே! அவர் தான் இவர்“. “அவர் தானா? கடந்து செல்வது அவர் தானா?'' அவனுக்குள் எழுந்த பதறல், ''இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்” என்று கூச்சலிடச் செய்தது. ஓ, மிருதுவான இரட்சகரே என்னைக் கடந்து சென்றுவிடாதேயும் என் எளிமையான கூக்குரலைக் கேட்டருளும் மற்றவர்களை நீர் சந்திக்கும் போது என்னைக் கடந்து சென்று விடாதேயும் ''ஓ, இயேசுவே“. அங்கிருந்த சிலர், “வாயை மூடு, நீ அதிகமாக சத்தமிடுகிறாய்!” என்றனர். 81அவனோ பதறினான். அவர் கடந்து சென்றுவிட்டால் ஒருக்கால் அவனுக்கு வேறொரு தருணம் கிடைக்காமல் போகலாம். நமக்கும் கூட இன்னுமொரு தருணம் கிடைக்காமல் போகலாம். ஒருக்கால் இது கடைசி இரவாய் இருக்கக்கூடும். அவன் பதறல் கொண்டு, ''ஓ, இயேசுவே'' என்று கதறினான். வாயை மூட அவனிடம் யார் கூறின போதும், அவன் இன்னும் அதிகமாக சத்தமிட்டான். அவன் பதறினான். யாரும் அவனை நிறுத்தவே முடியவில்லை. அவன் ''தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்'' என்று பதறினான். 82அப்பொழுது தேவனுடைய குமாரன், உலகத்தின் பாவங்களைத் தன் தோள்களின் மீது சுமந்தவராய், தம்மையே பலியாக அர்ப்பணிக்க எருசலேமை நோக்கி கொண்டிருந்தார். அவனுடைய கூக்குரலைக் கேட்டதும் அவர் நின்றுவிட்டார். பதறும் கூக்குரல் தேவனுடைய குமாரனை நிறுத்தி, ''நான் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாய்?'' என்று கேட்கச் செய்தது. ''ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும்“. ''நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது“. அது போதும், பதறல் ஏதாவதொன்றைப் பெற்றுக்கொள்ள அவசியமான நேரம் வரும்போது, விசுவாசம் அதை இறுகப் பற்றிக் கொள்கிறது. பாருங்கள்? பர்த்திமேயு , “சற்று பொறுங்கள், சற்று பொறுங்கள். என்னால் பார்க்க முடிகின்றதா என்று பார்க்கலாம். அநேக ஆண்டு காலமாக என் கைகளை நான் பார்த்ததேயில்லை. இப்பொழுது பார்த்திருக்க முடிகின்றதா என்று பார்க்கலாம். என்னால் பார்க்க முடியவில்லையே!'' என்று அவன் கூறவேயில்லை. ''உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது“, என்று இயேசு கூறினதே அவனுக்குப் போதுமாயிருந்தது. அதுதான் அவனுக்குத் தேவையாயிருந்தது. 83பதறல் ஒரு பொருளைக் கொண்டு வருகின்றது. அது எவ்வளவுதான் சொற்பமாகக் காணப்பட்டாலும், அது ஏற்றுக் கொள்ளப்பட்டு விசுவாசிக்கப்படுகின்றது. ஏனெனில் பதறல் அந்தப் பொருளை உந்திக் கொடுக்கும் போது, விசுவாசம் அதை பிடித்துக் கொள்கிறது. பாருங்கள்? அன்பும் அதனுடன் கலந்து, அது நிறைவேறுகிறது. பதறல் தான் இதற்கு தூண்டுதலாயுள்ளது. குருடனான பர்த்திமேயு இதை உடனே புரிந்து கொண்டான். ஒரு நாள் பேதுரு கப்பலில் சென்று கொண்டிருந்த போது, பதறல் கொண்டு, ஏதோ தவறுள்ளது. ஒரு ஆவி என்னை நோக்கி நடந்து வருகின்றது என்று உரக்க சத்தமிட்டான். கப்பல் அமிழ்ந்து போகும் நிலையில் இருந்தது. அவன் ''ஆண்டவரே, அது நீரேயானால், நான் தண்ணீரின் மேல் நடந்து உம்மிடம் வர உத்தரவிடும்'' என்றான். அவன் கப்பலை விட்டு இறங்கி தண்ணீரின் மேல் நடக்கத் தொடங்கினான். அப்பொழுது அவனுக்குப் பயமுண்டாயிற்று. அவன் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தான் - பதறல் - தேவனுடைய கட்டளைக்குக் கீழ்படிந்தும் கூட தவறுதல் ஏற்பட்டது. சபை இதை புரிந்து கொள்ளும் என்று கருதுகிறேன். அவன் தேவன் கட்டளையிட்டதை தான் செய்ய முயன்றான். 84இன்றிரவு இங்குள்ள கிறிஸ்தவர்களே, பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலை பின்பற்றவே நீங்கள் முயல்கின்றீர்கள். அப்படியிருந்தும் புற்று நோய் உங்களைப் பிடித்துக் கொண்டால் - புற்று நோய் அல்லது காச நோயின் மூலம் மரணம் உங்களை சந்திக்க முயன்றால் - பேதுரு எவ்விதம் உரிமையுடன், “ஆண்டவரே, என்னை இரட்சியும்; இல்லையேல் நான் மடிந்து போவேன்'' என்று அலறினானோ, அதே உரிமை உங்களுக்கும் உண்டு. அவன் பதறிப்போய் தேவனை நோக்கிக் கூப்பிட்டான். அப்பொழுது ஒரு கரம் அவனைப் பிடித்து தூக்கிற்று. உங்களுக்கும் அதே கரம் உண்டு. ஆனால் அவன், ”ஆண்டவரே, என்னை இரட்சியும்'' என்று கூச்சலிட்டான். அவர் என் நம்பிக்கையிழந்த கூக்குரலைக் கேட்டு தண்ணீரிலிருந்து என்னைத் தூக்கிவிட்டார் நான் இப்பொழுது பாதுகாப்பாக இருக்கிறேன் (பாருங்கள்?) நீங்கள் அவரை நோக்கி கூக்குரலிடும் போது, அதுதான் சம்பவிக்கும். 85அந்த சிறுவனுக்காக - அவன் மகனோ, பேரனோ, மருமகனோ என்று எனக்குத் தெரியவில்லை - இந்த ஸ்திரீ பதறினாள். கர்த்தர் அதைக் கேட்டார். பேதுரு அமிழ்ந்து போகின்ற நிலையில் கர்த்தர் அவனுக்குச் செவி கொடுத்தார் என்று நாம் பார்க்கிறோம். அவனுக்களிக்கப்பட்டிருந்த வேலையை அவன் செய்து கொண்டிருந்தபோது, அவன் அமிழ்ந்து போகத் தொடங்கினான். அவன் தவறிப் போனான் நீ அவ்விதம் தவறினாலும், அதனால் பரவாயில்லை. நாம் எல்லோருமே தவறுகிறவர்களாயிருக்கிறோம். தொடக்கத்தில் நாம் தோல்வியடைகிறோம். ஆனால் பலத்த கரம் கொண்டு தண்ணீரிலிருந்து நம்மை தூக்கியெடுக்க நமக்கு ஒருவர் உண்டு. நீ தவறு செய்திருந்தால் - சில பெண்கள் தவறு செய்கின்றனர். சில மனிதர் தவறு செய்கின்றனர். சில வாலிப பையன்களும் பெண்களும் தவறு செய்கின்றனர். அச்சமயம் அமிழ்ந்து போகாதீர்கள். நீங்கள் பதறல் கொண்டு, ''ஆண்டவரே, என்னை காப்பாற்றும்; இல்லாவிட்டால் நான் மடிந்துபோவேன்'' என்று கூக்குரலிடுங்கள். அதைக் குறித்து பதறல் கொள்ளுங்கள். தேவன் உங்களுக்குச் செவி கொடுப்பார். நம்பிக்கையிழந்த நிலையிலுள்ள எந்த ஆத்துமாவுக்கும் அவர் செவி கொடுக்கிறார். அதை தான் இப்பொழுது வலியுறுத்த விரும்புகிறேன். 86நமது அருமை இயேசு கிறிஸ்துதாமே, இவ்வுலகிலேயே மிகப் பெரிய போர்க்களமாகிய கெத்சமனேயில், பதறி அழுதார். அவர் உலகத்தின் பாவங்களைச் சுமக்க வேண்டுமா அல்லது அவருடைய அருமை சீஷர்களுடன் இவ்வவுலகிலேயே இருந்துவிட வேண்டுமா என்னும் போராட்டம் அவருக்குள் எழுந்தது. அவருடைய தாழ்மையை அங்கு கவனியுங்கள். அவர் தம்மைத் தாமே தாழ்த்தி, “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது'' என்றார். பரலோகத்தின் தேவன் வாக்களித்திருந்த வார்த்தைக்கு அவர் தம்மைத் தாழ்த்தினார். கவனியுங்கள். அவர் சற்று தூரம் அப்புறம் சென்றார். அவரே சற்று தூரம் அப்புறம் சென்றால், அதைக் காட்டிலும் எவ்வளவு தூரம் நாம் செல்ல வேண்டும் கவனியுங்கள், ”அவர் அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார் என்று லூக்கா சுவிசேஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது (லூக்கா 22:44). அப்படியானால் நாம் எவ்வளவு ஊக்கமாக ஜெபிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்? கிறிஸ்துவே - மாமிசத்தில் தோன்றிய இவருக்கு இந்நிலை ஏற்பட்டதென்றால், கிருபையினால் இரட்சிக்கப்பட்ட பாவிகளாகிய நாம் இன்னும் எவ்வளவு அதிக ஊக்கமாக ஜெபிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்? அந்த தீர்மானம் தேவனுடைய குமாரனையே பதறும் நிலைக்கு கொண்டு வருமானால், உங்களுக்கும் எனக்கும் அது என்ன செய்யும்? நாம் பதறி அழ வேண்டியவர்களாயிருக்கிறோம். இந்தக் கடைசி நாட்களில் தேவன் தமது மகத்தான அடையாளங்களாலும் வல்லமையினாலும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். அது நம்மை பதறும் நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அது உண்மை. நமக்கு சுகமளிக்கவும் நம்மை இரட்சிக்கவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். அது நம்மை பதறல் கொள்ளச் செய்து சுகமளிக்கும் அந்தக் கல்லினிடம் கொண்டு செல்ல வேண்டும். அது உண்மை. 87செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஃபிளாரன்ஸ் நைட்டிங் கேல் என்பவரின் கொள்ளுப் பேத்தியின் பெயரும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல். இந்தக் கொள்ளுப் பேத்தியின் புகைப்படத்தை நீங்கள் புத்தகத்தில் கண்டிருக்கிறீர்கள். புற்று நோய் அவளைத் தின்றுவிட்டிருந்தது. அவளுடைய எடை முப்பது பவுண்டு மாத்திரமே. அவளை ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்திலுள்ள லண்டனுக்கு அழைத்து வந்தனர். அவள் பதறல் கொண்டிருந்தாள். சகோதரன் பாஸ்வர்த் “எங்களால் ஆப்பரிக்காவுக்கு வர இயலாது” என அவளுக்கு கடிதம் எழுதியிருந்தார். அவள் தன் தாதியைக் (nurse) கொண்டு இவ்விதம் எழுதியிருந்தார். ''என்னால் அசைய முடியவில்லை. என்னால் முடியவில்லை''. அந்தப் புகைப்படத்தை கண்டிருக்கிறீர்கள். நாங்கள் ஒரு துண்டை மேல் வைத்து அந்த இடத்தை மறைத்துவிட்டோம். ஒரு சிறு கயிறு மாத்திரமே அதைச் சுற்றிலும் புகைப்படத்தில் காணப்படுகிறது. அவளுடைய உடல் அரை நிர்வாணமாயிருந்தது. அதை அப்படியே புத்தகத்தில் பிரசுரித்தால் யாராவது எங்களை குற்றப்படுத்துவார் என்று எண்ணி சிறு துண்டை வைத்து அந்தப் பாகத்தை மறைத்துவிட்டோம். அவளுடைய இடுப்பைச் சுற்றிலும் ஒரு கந்தை துணி, அல்லது துவாலை, உண்டாயிருந்தது. இடுப்பிற்கு மேல் ஒன்றுமேயில்லை. எனவே ஒரு காகிதத் துண்டை அந்தப் புகைப்படத்தின் மேல் வைத்து, அந்த பாகத்தை மறைத்துவிட்டு மறுபடியும் புகைப்படம் எடுத்து அதைப் பிரசுரிக்கத் தீர்மானித்தோம். ஏனெனில், அந்த புகைப்படத்தை அப்படியே புத்தகத்தில் வெளியிட்டிருந்தால், சரியான விதத்தில் ஆலோசிக்க முடியாதவர்கள் என் மீது குற்றம் கண்டுபிடித்திருப்பார்கள். 88அவளை எக்காரணத்தைக் கொண்டும் அசைக்கக் கூடாது என்று மருத்துவர் கூறியிருந்தார். நான் இங்கிலாந்துக்கு விஜயம் செய்யப் போகின்றேன் என்று அவள் கேள்விப்பட்டவுடனே, அவளை ஒரு ஸ்ட்ரெட்சரில் படுக்கவைத்து, விமான மார்க்கமாக லண்டனுக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து பக்கிங்காம் அரண்மனைக்கு அவளைக் கொண்டு செல்ல ஒரு காப்பாளன் (Guard) விமான நிலையத்திற்கு வந்திருந்தான். அவளுக்காக ஜெபம் செய்ய வரும்படி என்னிடமும் காப்பாளன் ஒருவனை அனுப்பியிருந்தனர். அவள் பேசவும் முடியாதபடிக்கு அவ்வளவு மோசமான நிலையில் இருந்தாள். அவளுடைய கை என் கையைப் பிடித்துக் கொள்ள யாராவது ஒருவர் அதை தூக்கிவிட வேண்டியதாயிருந்தது. 89லண்டன் எப்படியென்று உங்களுக்குத் தெரியும். இராணுவத்தில் பணிபுரிந்த உங்களில் சிலர் அங்கு சென்றிருக்கிறீர்கள். அது எப்பொழுதும் பனியால் மூடப்பட்டிருக்கும். நான் ஜன்னல் பக்கம் முழங்காற்படியிட்டு... அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது... கண்ணீர் சிந்த போதுமான ஈரப்பசை எவ்விதம் உண்டாயிருந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவள் சருமம் மூடப்பட்ட எலும்புக் கூடாய் காட்சியளித்தாள். அவள் கால்கள் இடுப்பில் சரியாக பொருந்தவில்லை. இரண்டு மூன்று அங்குலம் இடைவெளி உள்ளதுபோல் தோன்றினது. அவளுடைய இரத்தக் குழாய்கள் முழுவதும் சுருங்கிப் போய் இயங்காமலே இருந்தன. அவள் எப்படித்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தாளோ என்று எனக்குத் தெரியவில்லை. அவள் சுகம் பெற்ற பின்பு எடுத்த புகைப்படத்தையும் நீங்கள் கண்டிருக்கின்றீர்கள். 90அவள் படுக்கையினருகில் நான் முழங்காற்படியிட்டேன். அவள் பதறும் நிலையில் இருந்தாள். என்னால் வர முடிந்தாலும் முடியாவிட்டாலும், அவளை எப்படியாயினும் கொண்டு வரத் தீர்மானித்திருந்தனர். நான் அங்கு சென்றேன் மரிக்கும் தருவாயிலிருந்த அந்த ஏழை சிறுமியின் விசுவாசத்தைக் கண்ட போது, என் மனம் நொந்தது. என்னால் இயன்றவரை, என் முழு இருதயத்தோடும் அவளுக்காக ஜெபித்தேன். நான் ஜெபம் செய்யத் தொடங்கின போது, ஒரு வெண்புறா பறந்து ஜன்னலின் வழியாக உள்ளே வந்து கூவிக் கொண்டே இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தது. அது யாரோ வளர்க்கும் புறா என்று எண்ணியிருந்தேன். நான் இங்கிலாந்தையடைந்து ஒரு மணி நேரம் கூட அப்பொழுது ஆகவில்லை; விமான நிலையத்திலிருந்து நேரடியாக அங்கு சென்றுவிட்டேன். அது வளர்க்கும் புறா என்று எண்ணினேன். நான் ஜெபத்தை முடித்துக் கொண்டு எழுந்து “ஆமென்” என்று சொன்ன போது அது பறந்து சென்றுவிட்டது. அந்த புறாவின் சத்தத்தைக் கேட்டார்களா என்று அங்குள்ள சகோதரர்களிடம் வினவினேன். அவர்களும் அதைக் குறித்து தான் அப்பொழுது பேசிக் கொண்டிருந்தனர். “அந்த புறா வந்ததன் அர்த்தம் என்னவென்று தெரியுமா?” என்று நான் கேட்க ஆரம்பித்த போதே, ''கர்த்தர் உரைக்கிறதாவது“, 'நீ உயிர் வாழ்வாய், சாக மாட்டாய்' என்னும் வாக்குத்தத்தம் என்னில் தோன்றியது. அவள் இன்றைக்கும் உயிர் வாழ்ந்து கெண்டிருக்கிறாள் ஏன்? பதறல். அந்தப் பதறல் அவளைத் தீர்மானம் கொள்ளச் செய்தது - உயிர் வாழ்வது அல்லது மடிவது என்று. நான் அங்கு அடைந்த அதே சமயத்தில் அவளும் வந்து சேர பதறல் ஒழுங்கு செய்தது. தேவன் அடையாளமாக வெண்புறா ஒன்றை அனுப்பி, ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்னும் வாக்குத்தத்தத்தை அருளினார் பதறல். 91அரிசோனாவிலுள்ள பீனிக்ஸ் பட்டணத்தைச் சேர்ந்த சகோதரி ஹாட்டி வால்டோரப் (Sister Hattie Waldrop) என்னுடைய முதலாவது கூட்டத்தில் பக்க வழியில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இருதய புற்றுநோய் இருந்தது.அவர்களுடைய கணவரும் வேறொருவரும் அவர்களைக் கொண்டு வந்தார்கள். கூட்டத்திற்கு எப்படியாகிலும் வரவேண்டுமென்று அவர்கள் ஒரு தீர்மானம் எடுத்தார்கள். அவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தார்கள். அவர்களால் சுவாசிக்கவும் கூட முடியவில்லை. புற்று நோய் தின்றுவிட்டிருந்த இருதயத்தின் அந்த பாகத்திலே இரத்தம் சென்று அடைத்து, இரத்த ஓட்டத்தை நிறுத்தியது. அது பதினெட்டு அல்லது பதினொன்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஏன் இருபது ஆண்டுகளுக்கு முன்பும் கூட இருக்கலாம். அது 1947-ம் ஆண்டில். அவர்கள் கணவரிடமும் அந்த மற்றவரிடமும், ''நான் வரிசையிலிருக்கும் போதே மரிக்க நேரிட்டாலும், என்னை அங்கு கொண்டு சென்றுவிடுங்கள்'' என்றார்களாம் பதறல் நிலை. அவர்கள் சுய நினைவை இழந்துவிட்டிருந்தார்கள்; அவர்கள் மரிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர்களோ, மரித்துப்போய் விட்டதாகக் கூறுகிறார்கள். எனக்குத் தெரியாது. ''மரித்துப் போன ஒரு ஸ்திரீ வரிசையில் வருகிறார்கள்'' என்று என்னிடம் கூறினார்கள். அவர்கள் வந்த போது, உயிர் பிரிந்துவிட்டது போன்று இருந்தது. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்குண்டாயிற்று. நான் சென்று கைகளை அவள் மேல் வைத்தேன். அவள் எழுந்து வீட்டிற்கு நடந்து சென்றாள். அது ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகட்கு முன்பாக நிகழந்தது. சுகதேகியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றாள். நான் டூசானுக்குச் செல்லும் போது அவர்கள் என்னை அங்கு சந்திப்பாள். பதறும் நிலை ''நான் வழியில் மரிக்க நேரிட்டாலும், என்னை அங்கு கொண்டு சென்றுவிடுங்கள். அவர் மற்றவர்களை சுகப்படுத்தினார். என்னையும் சுகப்படுத்துவார்.'' 92இந்நாளில் நமது இருதயங்கள் அன்பினால் நிறையப்பட்டு, ஊக்கத்தோடும், பதறல் கொண்டும். இருப்பதாக! சிறிது கழிந்தால் காலதாமதாமாகிவிடும். ஒரு சமயம் யவீருவின் குமாரத்தி மரணத்தருவாயிலிருந்தாள். அவன் எல்லைக்கோட்டு விசுவாசி. அவன் இயேசுவை விசுவாசித்தான்; ஆனால் அதே சமயத்தில் அதை பகிரங்கமாக அறிக்கை செய்ய பயந்தான். ஏனெனில் அவன் அப்படிச் செய்தால், அவனை ஜெப ஆலயத்திலிருந்து புறம்பே தள்ளிவிடுவார்கள். மருத்துவர் ஒரு நாள் காலை வந்து, “அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள்'' என்று கூறிவிட்டார். அப்பொழுது பதறல் ஆரம்பித்தது. அவனுடைய ஸ்தானத்தில் இருந்து கொண்டு, அவன் நசரேயனாகிய இயேசுவுடன் இருப்பதை யாரும் காணக் கூடாது. ஏனெனில் ஜெப ஆலயத் தலைவனின் ஸ்தானத்தை அவன் இழந்து விட நேரிடும். ஆனால் ஒன்று மாத்திரம் கூறுகிறேன். அவசர நிலை ஒன்று வந்த போது, அது அவனை பதறல் கொள்ளச் செய்தது. அவன் ஜெப ஆலயத் தலைவன் உடுக்கும் தன் மேலங்கியையும் தலைப்பாகையும் தேடியெடுத்து அவைகளை அணிந்து கொண்டு, மெல்ல நழுவிச் செல்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அவன் எப்பக்கமும் நெருக்கும் திரளான ஜனக் கூட்டத்தின் வழியாய் வருகிறான். அங்கு ஒரு ஸ்திரீ அப்பொழுதுதான் இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். அங்கு எல்லோரும் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அவன் எதையும் பொருட்படுத்தாமல் அவரையணுகி, ''ஆண்டவரே, என் மகள் மரணத்தருவாயிலிருக்கிறாள். நீர் வந்து உம்முடைய கைகளை வைத்தால் அவள் உயிர் பெறுவாள்” என்றான். ஓ, என்னே! பதறல் உங்களை சில சமயங்களில் பேச வைத்து செயல்படத் தூண்டும் அந்த பதறலின் விளைவாக அவனுடைய குமாரத்தி காக்கப்பட்டாள். 93பெரும்பாடுள்ள அந்த ஸ்திரீயை போலவே நாமும் பதறல் கொள்வோமாக. அவள் வைத்தியர்களுக்கு தன் ஆஸ்தியெல்லாம் செலவழித்தும், அவர்களால் குணமாக்க முடியவில்லையென்று வேதம் கூறுகின்றது (மாற்கு5:26). ஸ்திரீகளுக்குள்ளே வழிபாடு நின்றுபோகும் சமயத்தில் அவளுக்கு உதிரப்போக்கு அதிகமாகி அது நிற்கவேயில்லை. அவள் ஒருக்கால் தன் பண்ணைகளையும், கழுதைகளையும், குதிரைகளையும் மற்றெல்லாவற்றையும் விற்றிருக்கக் கூடும். ஆயினும் அதனால் பலன் ஒன்றுமில்லை. அவளுடைய ஆசாரியன் இயேசுவிடம் இதைச் சொல்லக் கூடாது என்று எச்சரித்திருப்பான். ஆனால் ஒரு நாள் அவள் கீழே பார்த்தாள். அவள் ஆற்றங்கரையில், உயரமான இடத்தில், அவளுடைய பண்ணை இருந்த ஸ்தலத்தில் வாழ்ந்து வந்தாள். அவள் பார்த்தபோது, ஒரு மனிதனைச் சூழ்ந்து திரளான கூட்டம் இருப்பதைக் கண்டு, “அது என்ன?” என்று விசாரித்தாள். அவர்கள், “அது நசரேயனாகிய இயேசு” என்றனர். அவள் பதறல் கொள்ள ஆரம்பித்தாள். அவள், ''நான் ஒன்றுமற்றவள்... நான் மாத்திரம் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டால் சொஸ்தமாவேன்'' என்று மனதில் எண்ணிக் கொண்டாள். குற்றம் கண்டுபிடிப்பவர் அனைவரையும் அவள் கடந்து சென்று அவ்விடத்தையடைந்தாள். அவள் பதறல் கொண்டு அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். அவர் திரும்பிப் பார்த்து, “என்னைத் தொட்டது யார்?'' என்றார். எல்லோரும் மறுத்தனர், அவர் சுற்றிலும் பார்த்தார். அவர் தேவனுடைய மகத்தான வரத்தைப் பெற்றிருந்தார். அவரே தேவன் அந்த ஸ்திரீயை அவர் கண்டுபிடித்து, அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்று போயிற்று என்று கூறினார். பதறல் அவளை அந்நிலைக்கு கொண்டு சென்றது. 94பதறல் தான் தென்தேசத்து ராஜ ஸ்திரீயை சாலொமோனிடம் கொண்டு சென்றது. தேவனுடைய வரம் சாலொமோனின் மூலம் கிரியை செய்கிறது என்று அவள் கேள்விப்பட்டாள். பதறல் தான் அவளை அங்கு கொண்டு சென்றது. மானிடராகிய நீங்களும் நானும் பதறும் நிலையைடைகின்றோம். அவர்கள் உங்களையும் என்னையும் காட்டிலும் வித்தியாசமானவர்களல்ல. அவர்களுக்கும் ஐம்புலன்கள் இருந்தன. அவர்களும் மானிடரே. தென்தேசத்து ராஜ ஸ்திரீ தன்னுடைய ராஜ்யத்தில் பாதியைக் கொண்டு செல்லும் அளவிற்கு பதறும் நிலைக்கு ஆளாகினாள். பாலைவனத்தின் வழியாகச் செல்லும் போது இஸ்மவேலர் அவளைக் கொள்ளையடிப்பார்களோ என்னும் எண்ணம் அவளை விட்டுப் போயிருந்தது. தொண்ணூறு நாட்களாக அவள் சஹாரா பாலைவனத்தின் வழியாக ஒட்டகத்தின் மேல் பயணம் செய்தாள் - பதறல், எப்படியோ அவள் அங்கு சென்றாள். அங்கு சென்ற போது, அவள் என்னவெல்லாம் அறிய வேண்டுமென்று விரும்பினாளோ, அவை ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைக்கப்படவில்லை. அத்தனையும் அவன் அவளுக்கு எடுத்துரைத்தான் - பதறும் நிலை. நியாயத்தீர்ப்பின் நாளில் அவள் இந்த சந்ததி யாரோடெழுந்து குற்றஞ் சாட்டுவாள். ஏனெனில் சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று இயேசு கூறினார், பதறல். 95முடிக்கும் முன்னதாக இதைக் கூற விரும்புகிறேன் அண்மையில் மெக்சிகோவில் பதறலைக் கண்டேன். அந்த பெரிய அரங்கத்தில் நான் மேடையின் மேல் ஏறினேன். அப்பொழுது இரவு சுமார் 10 மணி இருக்கும். ஜனங்கள் காலை 9 மணி முதற் கொண்டே அங்கு கூடத் தொடங்கினார்கள். முப்பது ஆண்டுகளாக குருடாயிருந்த வயோதிபர் ஒருவர் அதற்கு முந்தின இரவு தான் பார்வையடைந்து, பட்டணம் முழுவதும் சுற்றி நடந்து, சாட்சி பகன்று வந்தார். அங்கு பழைய துணிகளும் கம்பளிகளும் முப்பது நாற்பது கெஜம் உயரத்தில் குவிக்கப்பட்டிருந்தன. அங்கு ஏறக்குறைய நாற்பது அல்லது ஐம்பதாயிரம் பேர் இருந்தனர்; பழைய தொப்பிகளும் கம்பளிகளும் - அது யார் யாருக்குச் சொந்தமோ அவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். அங்கு மழை பயங்கரமாய் பெய்து கொண்டிருந்தது. 96அவர்கள் கயிற்றின் மூலமாக சுவற்றின் வழியாக என்னை இறக்கினார்கள். நான் மேடையின் மேல் ஏறினேன். ஊழியக்காரன் இங்கு உட்கார்ந்திருப்பவர். அவரும் அவருடைய மகளும் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் அங்கு வந்து சேர்ந்தனர் அவர் சகோதரன் ஆர்மன்ட்-டைக் (Brother Arment) குறித்து பேசினார். அவரை இந்நேரத்தில் நாம் நினைவு கூருகிறோம். இன்றிரவு அவர் மகிமையின் வீதிகளில் இருக்கிறார் சகோதரன் ஆர்மன்ட்டும் அங்கு இருந்தார். அவர் 'மேல் கோட்டை' (Overcoat) கழற்றி விட்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த சகோதரன் ஜாக் மூரிடம் கொடுத்து போட்டுக் கொள்ளச் சொல்லிவிட்டு, அவர் மழையில் நின்றார், தென் பாகத்தைச் சேர்ந்த அவர், அன்று மெக்சிகோவில் பெய்த மழையின் காரணமாக உறைந்துவிடுவார் போலிருந்தது. அவர் அங்கு நின்று கொண்டிருந்தார். என் மகன் பில்லிபால் என்னிடம் வந்து, “அப்பா, நீங்கள் ஒரு உபகாரம் செய்ய வேண்டும். மெக்சிகன் பெண்மணி ஒருத்தி இன்று காலை மரித்துப்போன அவளுடைய குழந்தையின் சடலத்துடன் இங்கு நின்று கொண்டிருக்கிறாள். அவளை வரிசையில் வராமல் தடுக்க போதிய வாயில் காப்போர் (Ushers) இல்லை'' என்றான். குருடனான வயோதிபன் ஒருவன் மேல் கையை வைத்தல் அவனுக்குப் பார்வையளிக்குமானால், மரித்துப்போன அவள் குழந்தையின் மேல் கையை வைத்தால், அதற்கு மீண்டும் உயிரையளிக்க வேண்டும் என்னும் விசுவாசம் அவள் கொண்டிருந்தாள். அவள் கத்தோலிக்க மார்க்கத்தைச் சேர்ந்தவள். அவளை யாராலும் பிடித்து நிறுத்த முடியவில்லை. சகோதரன் எஸ்பினோசாவும் மற்றோரும் அவளிடம், ''எங்களிடம் ஜெப அட்டைகள் இல்லை. எல்லாம் கொடுத்து தீர்ந்துவிட்டது. நீ இன்னும் ஒரு இரவு காத்திருக்க வேண்டும்'' என்று கூறியும் யாதொரு பயனுமில்லை. 97அவளோ, “என் குழந்தை இன்று காலை இறந்துவிட்டது. நான் அங்கு மேடைக்கு செல்ல வேண்டும்'' என்று பதிலளித்தாள். ஜெப அட்டை இருந்தாலும் இல்லாமற் போனாலும், அவள் எப்படியாயினும் அங்கு செல்ல வேண்டுமென்று அடம் பிடித்தாள். அவளைத் தடுத்து நிறுத்த அவர்கள் 300 வாயில் காப்போர்களை வரிசையாக நிறுத்தினர். இருந்தபோதிலும், அவர்கள் கால்கள் வழியாக அவள் கடந்துசென்று, அவர்கள் முதுகுகளின் மேலேறிக் குதித்து, மரித்த குழந்தையின் சடலத்தை கையிலேந்தி ஓடி, அவர்கள் மத்தியில் விழுந்து, மீண்டும் எழுந்து ஓடத் தொடங்கினாள். இவையாவும் அவளில் எவ்வித வித்தியாசத்தையும் உண்டு பண்ணவில்லை. எப்படியாயினும் அவள் அங்கு அடைய முயன்றாள். அவள் பதறல் கொண்டிருந்தாள். பார்வையளித்த தேவன், உயிரையும் அளிக்க முடியும் என்பதாய் தேவன் அவள் இருதயத்தில் பேசியிருந்தார். ஓ, அவள் பதறல் கொண்டிருந்தாள். அவளுக்குள் ஏதோ ஒன்று எரிந்து கொண்டிருந்தது. 98ஓ, வியாதியஸ்தர்களே, நீங்களும் அதை சில நிமிடங்கள் உங்களுக்குள் எரிய விட்டுகொடுத்து, என்ன நிகழ்கிறதென்று பாருங்கள் - அத்தகைய பதறல்... அன்றிரவு இச்சிறுவனை சுகமாக்கின தேவன், புற்று நோயால் அவதியுறும் இந்த ஸ்திரீயையும், இந்த மனிதனையும், குணமாக்கமுடியும். குமாரி ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்... ஓ, ஆயிரக்கணக்கானவை... யாரும் தர்க்கிக்கக் கூடாத சாட்சிகள் - மரித்தோரை உயிரோடெழுப்புதல், வியாதியஸ்தரை சுகப்படுத்துதல், இன்னும் அநேக செயல்கள் நேற்று அவர் தேவனாயிருந்தால், இன்றும் அவர் தேவனாயிருக்கிறார். பதறும் நிலைக்கு வாருங்கள். அப்பொழுது உங்களில் ஏதாகிலும் கிரியை நடக்கும். 99அவள் (மெக்சிகன் பெண்) பதறல் கொண்டு என்னை அணுகினாள். நான் சகோ. ஜாக் மூரிடம், ''அவளுக்கு என்னைத் தெரியாது. அவள் என்னை முன்பு கண்டதில்லை. யார் மேடையின் மேல் இருக்கிறார்கள் என்று அவளுக்கு தெரியாது'' என்றேன் - அந்த சிறிய கத்தோலிக்கப் பெண். அவளுக்கு ஆங்கிலம் ஒரு வார்த்தையும் கூட பேசத் தெரியாது. அப்படியிருக்க, யாரென்று அவளுக்குத் தெரியப் போகின்றது. எனவே நான் சகோ. ஜாக் மூரிடம், ''நீங்கள் கீழே இறங்கிச் சென்று குழந்தைக்காக ஜெபம் செய்யுங்கள். அவள் திருப்தியடைந்து போய்விடுவாள்“ என்றேன். அங்கு சகஜமாக கூச்சல் போட்டு கேட்டுக் கொண்டேயிருந்தது. அவள் குதிப்பாள்; அப்பொழுது எல்லோரும் அவளை அடக்கி சத்தம் போடுவார்கள். அவளோ அவர்கள் தோள்களின் மேல் ஓடி, அவர்கள் மத்தியில் விழுந்துவிடுவாள். இப்படி சில அடி தூரம் முன்னேறுவாள், அவர்கள் அவளைப் பின்னால் தள்ளப் பார்ப்பார்கள். அவளோ குழந்தையைப் பிடித்துக் கொண்டே அவர்கள் கால்களின் வழியாகப் புகுந்து ஓடி வருவாள். வாயில் காப்போரையும் மற்றவர்களையும் அவள் கலங்கச் செய்தாள். அவளுக்கு அது எவ்வித வித்தியாசத்தையும் உண்டு பண்ணவில்லை. எப்படியாயினும் அவள் அவ்விடத்தையடைய வேண்டும். ஊழியக்காரனை ஜெபிக்கச் செய்ய வேண்டும். 100சூனேமியாளைப் போன்ற வெறோரு வரலாறு இது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், அது 3500 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது; இது 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. பாருங்கள்? இதே இன்றிரவும் நிகழக்கூடும். அதே பதறல் எழுந்தால், அது அன்பையும் விசுவாசத்தையும் போர்க்களத்திற்கு அனுப்பி, உங்களுக்கு தேவையானதைப் பெற்றுக் கொள்ளச் செய்யும். ஏனெனில் நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது தேவனுடைய வாக்குத்தத்தமாயுள்ளது. 101நான் அங்கிருந்த ஊழியக்காரனிடம் - சுவிசேஷகனிடம் அந்தப் பெண்ணுக்காக வருத்தப்பட்டேன். ஆனால் எனக்குள் எவ்வித பதறலும் எழவில்லை. நான், ''சரி, சகோ. ஜாக் மூர் அவளுக்காக ஜெபிப்பார். அத்துடன் அது முடிவடைந்துவிடும்'' என்று நினைத்தேன். “நான் இப்பொழுது கூறினது போன்று விசுவாசம்...'' என்று பேசத் தொடங்கினேன். அப்பொழுது நான் பார்த்தபோது, ஒரு தரிசனம் எனக்குண்டானது. அந்த தரிசனத்தில் கறுப்பு நிறமுள்ள மெக்சிகன் குழந்தை ஒன்று அமர்ந்து கொண்டிருந்தது. அது என்னை நோக்கி சிரித்துக் கொண்டேயிருந்தது. நான் உடனே, ''சற்று பொறுங்கள், சற்று பொறுங்கள்'' என்றேன். அவளுடைய பதறல் பரிசுத்த ஆவியானவரை ஏவி, நான் பேசிக் கொண்டிருக்கும் பொருளையும் என் இருதயத்தையும் அவர் மாற்றி, அவளுடைய குழந்தை அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதை தரிசனத்தில் எனக்குக் காண்பித்தார். பரிசுத்த ஆவியானவர் மீண்டும் என்மேல் வரும்படி அது செய்தது. நான் ”சற்று பொறுங்கள், சற்று பொறுங்கள். குழந்தையை என்னிடம் கொண்டு வாருங்கள்“ என்றேன். இறந்துபோன ஒரு உருவத்தை, நீலமும் வெள்ளையும் கலந்த ஈரக் கம்பளியில் சுற்றிய வண்ணம் அவள் என்னிடம் சுமந்து கொண்டு வந்தாள். அவள் இயேசுவின் உருவம் கொண்ட சிலுவையையும், (Crucifix) ஜெப மாலையையும் (Rosary) கையில் பிடித்திருந்தாள். அவள் தாழ விழுந்து, ”மரியாளே, வாழ்க!“ (Hail Mary!) என்னும் கத்தோலிக்கரின் ஜெபத்தைக் கூற முயன்றாள். நான், ”அதை உள்ளே போடு, அது அவசியமில்லை“ என்றேன். அவள் என் அருகில் வந்து, “பாதிரியாரே” என்று கூறி அலறினாள். நான் அவளிடம், “என்னை அவ்வாறு அழைக்க வேண்டாம். நீ விசுவாசிக்கிறாயா?'' என்று கேட்டேன். மொழிபெயர்ப்பாளர் ஸ்பானிய மொழியில் மொழி பெயர்த்துக் கூறினார். அவள், “ஆம்'' என்றாள். அவள் விசுவாசித்தாள். மொழி பெயர்ப்பாளர் அவளிடம், எப்படி அந்த விசுவாசம் அவளுக்கு வந்தது என்று கேட்க, அவள், ”தேவன் பார்வையற்ற ஒருவருக்கு பார்வையளிக்கக் கூடுமானால் இறந்துபோன என் குழந்தையின் உயிரையும் திரும்ப அளிக்க முடியும் என்று கூறினாள். ஆமென்! பதறல் அதற்கு நேராக அவனைத் தள்ளிற்று. என்னால் ஒன்றும் ஆகவில்லை நான் தரிசனத்தை மாத்திரமே கண்டேன். “கர்த்தராகிய ஆண்டவரே ஒரு சிறு குழந்தையைக் குறித்த தரிசனத்தைக் கண்டேன். ஒருவேளை அது இதுவாக இருக்கலாம்'' என்றேன். அந்நேரத்தில் குழந்தை கால்களை உதைத்துக் கொண்டு வா! வா! என்று அழுத்து. அவளோடு மருத்துவரிடம் சென்று, ''குழந்தை இறந்து போனது'' என்னும் அறிக்கையை வாங்கி வாருங்கள் என்றேன். மருத்துவர் “இக்குழந்தையின் மூச்சு, இருதயம்; நின்று, இரட்டைநிமோனியாவால் (Double pnemonia) என் அலுவலகத்தில் இன்று காலை ஒன்பது மணிக்கு இறந்தது'' என்று எழுதிக்கொடுத்தார். ஓ, அக்குழந்தை எனக்குத் தெரிந்த வரை இன்றிரவில் மெக்சிக்கோவில் ஜீவித்துக் கொண்டிருக்கிறது. ஏன்? அந்த சிறிய தாயாரின் இருதயத்தில் பதறல் ஏற்பட்டது. அவள் தன் குழந்தைக்காக கதறினாள். குருடனின் கண்களை அவர் திறக்கக் கூடுமானால், இறந்து போன குழந்தையையும் அவர் உயிரோடெழுப்ப முடியும் என்று அவள் அறிந்திருந்தாள். 102பதறல் நிலை. ''உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், நான் உங்களுக்குச் செவி கொடுப்பேன்'' பாருங்கள்? இராஜ்யம்... நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் யோவான் வரைக்கும் வழங்கி வந்தது. அது முதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள் (லூக். 16:16). நீங்கள் அங்கு சும்மா நின்று கொண்டு ஆண்டவரே என் கழுத்துப் பட்டையைப் பிடித்து என்னை உள்ளே தள்ளி விடும்'' என்று கூறமுடியாது. நீங்கள் பலவந்தமாய் அதற்குள் பிரவேசிக்க வேண்டும் நீங்கள் மரணத்துக்கும் ஜீவனுக்குமிடையே வந்து, பதறல் கொள்ளவேண்டும். 103மற்றுமொரு வரலாற்றைக் கூற சமயமிருந்தால் நலமாயிருக்கும். இப்பொழுது என் நினைவிலிருப்பது; ஒரு பெண் தவறான பாதையில் சென்று கொண்டிருந்தாள். அவள் அதினின்று விடுபட்டு, புதியவளாக மாறினாள். நான், ''சகோதரியே“ என்று அவளை அழைக்கும் வரைக்கும் அவள் மாறவில்லை. அவள் ஜெபத்தினின்று எழுந்து, நான் சரியாகிவிடுவேன் என்று நினைக்கிறேன்'' என்றாள். நான், “இல்லை, இல்லை, அதிலேயே நிலைத்திரு” என்றேன். முதலில் அவள் சிறிது ஜெபம் செய்து, பின்னர் உரக்க உரக்க ஜெபம் செய்தாள். சற்று கழிந்த பின்பு அவள் பதறல் கொண்டு, “ஓ, ஆண்டவரே, என்னை இரட்சியும்” என்று கதறினாள். “ஆல்கஹால் அனானிமஸ் (Alcohol Anonymous) (மது அருந்துவோரை சீர்திருத்தும் சங்கம் - தமிழாக்கியோன்) அவளைச் சுகப்படுத்த முடியவில்லை. வேறொன்றும் அவளை மாற்ற முடியவில்லை. அவளுடைய பெரிய, கருமையான கண்கள், என்னையே நோக்கியிருந்தன. கண்ணீர் அவள் கன்னங்கள் வழியாய் வழிந்தோடின. அவள், ”ஏதோ ஒன்று (மாற்றம்) எனக்குச் சம்பவித துள்ளது'' என்றாள். ஆம்! ஆம், ஐயா. அவளுக்கு ஏதோ ஒன்று சம்பவித்தது. அவள் பதறல் கொண்டாள். நாமும் அவ்வாறே பதறல் கொள்வோம். அது மரணத்துக்கும் ஜீவனுக்குமிடையேயுள்ளது. உங்களால் பதறல் கொள்ள முடியாவிட்டால், இந்த ஜெப வரிசையில் நீங்கள் வரவேண்டாம். நீங்கள் பதறல் கொண்டால், இவ்வழியாக வந்து என்ன நேரிடுகிறதென்று பாருங்கள். இங்கு வந்தவுடனே நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள். 104நாம் ஜெபம் செய்வோம். பதறலுடன் தேவனுடைய ராஜ்யத்தை எதிர் நோக்கியிருங்கள். அது உங்கள் மேல் வரும். எங்கள் பரலோகப் பிதாவே, இயேசுவின் நாமத்தில் நான் வேண்டிக் கொள்கிறேன். ஆண்டவரே, எங்கள் மேல் இரக்கமாயிருந்து, எங்களுக்குள் பதறலை துவக்கும். ஓ, தேவனாகிய கர்த்தாவே, எங்கள் மீது இரக்கமாயிருக்க வேண்டிக் கொள்கிறேன். இன்றிரவு ஜனங்கள் பதறும் இதயத்துடன் உம்மைத் தேடுவார்களாக! நீர் இங்கிருக்கிறீர் என்று நாங்கள் அறிவோம். நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர். 'அடையாளத்தை' (Token) பெற்றுள்ள இந்த ஜனங்கள், மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கிறார்கள்; பழைய உலக வாழ்க்கையிலிருந்து புதிய வாழ்க்கைக்கு அவர்கள் மாறியிருக்கின்றனர்... இரத்தம் அவர்கள் மேல் பூசப்பட்டு, தேவன் அவர்களுக்கு ஒரு அடையாளத்தை தந்திருக்கிறார், அந்த அடையாளத்தை அவர்கள் - வியாதியுள்ளவர்கள் - தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, “நான் தேவனால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்ட பொருள். நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். அவருக்குள் பாவம் எதுவுமில்லை. பிசாசு என்னிடம் கூறின யாவற்றையும் நான் வெறுத்துத் தள்ளுகிறேன். என் அடையாளத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்... என்னுடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, என்னுடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். எனக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் நான் குணமானேன். நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் சம்பாதிக்கப்பட்டவன் என்பதை தேவன் அங்கீகரித்துவிட்டார் என்பதற்கு அறிகுறியாக அந்த அடையாளத்தை இப்பொழுதும் பிடித்திருக்கிறேன். அவருடைய மரணத்தை குறிக்கும் அடையாளத்தை என் கைகளில் இப்பொழுது பிடித்திருக்கிறேன். அவர் உயிரோடெழுந்துவிட்டார். நான் அவருடையவன். அவர் என்னுடையவர். இன்றிரவு முதல், நான் தேவனை விசுவாசிப்பேன் என்றும், அங்கு சென்று அவருடைய தேவைகளை நான் பூர்த்தி செய்யும் போது நான் சுகமடைவேன் என்னும் உறுதியான விசுவாசத்துடன் செல்கிறேன். ஏனெனில் அவருடைய உதடுகளிலிருந்து எழுந்த கடைசி வார்த்தை: ”வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்பதே“ என்று கூறுவார்களாக! ஆண்டவரே, இதை அருளும், ஒரு பதறல் எங்களில் உண்டாகட்டும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் ஆமென். நம்ப முடியும், நம்புவேன், நான் நம்புகிறேன் நம்ப முடியும், நம்புவேன், நான் நம்புகிறேன் நம்ப முடியும், நம்புவேன், நான் நம்புகிறேன் இப்பொழுது இயேசு என்னை சுகப்படுத்துகிறார் என்று. ஒ, நம்ப முடியும், நம்புவேன், நான் நம்புகிறேன் நம்ப முடியும், நம்புவேன், நான் நம்புகிறேன் (சற்று யோசித்து பாருங்கள்: 'நான் தீர்மானித்துவிட்டேன்') நம்ப முடியும், நம்புவேன், நான் நம்புகிறேன் இப்பொழுது இயேசு என்னை சுகப்படுத்துகிறார் என்று. 105அதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? (சபையோர் “ஆமென்'' என்கிறார்கள் - ஆசி) ''என்னில் ஒரு வித்தியாசம் உண்டாகும் வரை, (விசுவாசிப்பதை) நான் நிறுத்த போவதில்லையென்று தேவனுடைய கிருபையால் நான் தீர்மானித்துவிட்டேன். என் மேல் கைகள் வைக்கப்பட்ட நான் இப்பொழுது அங்கு செல்லுகிறேன்'' தேவன் ஒருபோதும் நமக்குத் தவறியதில்லை. அந்த மகத்தான வைத்தியர் இப்பொழுது நம் அருகாமையில் இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். வார்த்தையை எழுதின தேவன், பலியாகச் செலுத்தப்பட்ட தேவன், நமது பாவங்களைக் கழுவும் அந்த அடையாளம் - அவருடைய சொந்த ஜீவன் - இன்றிரவு நம் மத்தியில் இருக்கிறார் என்று விசுவாசிக்கிறேன். ''உலகத்தின் முடிவு பரியந்தம்... நான் உங்களுடனே கூட இருக்கிறேன்'' உலகம் இனிமேல் என்னை காணாது. ஆனால் உலக முடிவுபரியந்தம் நான் உங்களுடனே, உங்களுக்குள்ளே இருப்பதால், கொஞ்சக் காலத்திலே நீங்கள் என்னைக் காண்பீர்கள். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் ''ஆமென்” என்கிறார்கள் - ஆசி) நான் அவரை நம்பியிருக்கிறேன். அவர் செய்வார் என்று விசுவாசிக்கிறேன். நீங்களும் அவ்வாறே விசுவாசிக்கிறீர்களா? 106நான் அதை தொடங்கினவுடனே, தரிசனங்கள் உண்டாவதைக் காண்கிறேன். (ஆமென்!) மகத்தானவைகளைப் பேசும் தேவனின் மகத்தான தரிசனங்கள். ஆமென்! நான் தரிசனம் காணத் தொடங்கினேனானால், முழு இரவும் கூட நாம் இங்கேயே இருக்கலாம். நீங்கள் அதை விசுவாசிக்கப் போகின்றீர்களா? நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? ஆமென்! என் முழு இருதயத்தோடும் நான் அதை விசுவாசிக்கிறேன். சகோதரன் பாமருக்கு (brother palmer) சற்று தள்ளி அமர்ந்திருக்கும் அந்த சிறிய ஸ்திரீ. அவள் எனக்கு அன்னியர். அவள் ஜார்ஜியாவிலிருந்து வந்திருக்கிறாள். அவளுக்கு பெண்களுக்கு ஏற்படும் கோளாறு உள்ளது. தேவன் அவளைச் சுகமாக்குவார் என்று அவள் விசுவாசத்தால், அவர் நிச்சயம் சுகப்படுத்துவார். என் வாழ்க்கையில் நான் இதுவரை அவளைக் கண்டதில்லை. அதுதான் அவளுக்கு ஏற்பட்டிருக்கும் கோளாறு. அந்த சிறு பெண்மணி. அவள் இதற்கு முன்பு செய்தியைக் கேட்டிருக்கிறாளோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது அவளைக் கண்டேன். நீ விசுவாசித்து, அது நிறைவேறுகிறதா இல்லையா என்று பார். ஆமென்! நீங்கள் மாத்திரம் விசுவாசித்தால் அது உண்மை. 107இங்கு பின்னால் அமர்ந்திருக்கும் சகோதரி ஒருவர் முதுகு வேதனையால் மிகவும் அவதிப்படுகின்றார்கள். அவர்கள் பெயர் திருமதி விஸ்டம், உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசித்தால், இயேசு கிறிஸ்து உங்களுக்கு சுகமளிப்பார். அவர்களை என் வாழ்க்கையில் நான் இதுவரை கண்டதில்லை. அவர்கள் வேதனையுடன் அங்கு அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் மஞ்சள் வண்ணமுடைய ஆடை அணிந்திருக்கிறார்கள். நான் கூறுவது சரியா? சரி, நாம் ஒருவருக்கொருவர் அன்னியர் தானே? ஆமாம்! சரி. நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம். சுகமடையுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். ஆமென்! வேறொரு அம்மாள் அங்கு உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு முதுகு வேதனை இருக்கிறது. அவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்றான். அவனுக்குத் தலைவலி. அது சரி. அவர்களுடைய பெயர் திருமதி. பார்க்கர். நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், இயேசு கிறிஸ்து உங்கள் இருவரையும் சுகமாக்குவார். அது முற்றிலும் உண்மை. ஆமென்! உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 108அங்கு ஒரு வயோதிபர் அமர்ந்திருக்கிறார். அவர் மிஷிகனைச் சேர்ந்தவர். அவருடைய காதுகளில் ஏதோ கோளாறு இருக்கின்றது. ஓ, அவர் சப்தங்களைக் கேட்கிறார் - ஆவியின் உபத்திரவம் அது சரியா? பேசுவது தேவனா அல்லது வேறு ஏதாவதா என்று உங்களுக்குத் தெரியவில்லை. உங்கள் காதுகளில் சப்தங்களைக் கேட்கிறீர்கள். நான் உங்களுக்கு முற்றிலும் அன்னியன். நான் கூறுவது சரியானால் உங்கள் கைகளை உயர்த்துங்கள். அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இனிமேல் அது உங்களைத் தொந்தரவு செய்யாது. இயேசு கிறிஸ்து உங்களை குணமாக்குகிறார். அந்த மகத்தான வைத்தியரை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் சந்தோஷமாக ஆர்ப்பரித்து “ஆமென்” என்கிறார்கள் - ஆசி). உங்களிடம் நான் பேசுவேன். ஆனால் உங்களுக்கு நார்வே தேசத்தின் மொழி மாத்திரமே தெரியும். சரி, சகோதரியே உங்களுக்கு அந்த மொழி தெரியுமானால், விசுவாசித்து அவரை வீட்டிற்குப் போகச் சொல்லுங்கள். அவருடைய தலைவலி அவரை விட்டுப் போய்விடும் என்று அவரிடம் கூறுங்கள். அவரை எனக்குத் தெரியாது என்று உங்களுக்குத் தெரியும். ஜெபிக்கப்படுவதற்காக நார்வே தேசத்திலிருந்து அவர் இங்கு வந்திருக்கிறார். சுகமடைந்தவராய் திரும்பிச் செல்லுங்கள். ஓ, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அது என்ன? அது அக்கினி ஸ்தம்பம் - பரிசுத்த ஆவியானவர். இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்பதன் அடையாளம் அது. அவர் இத்தகைய கிரியைகளைச் செய்வதை ஜனங்கள் அநேக வருடங்களுக்கு முன்பு கண்டனர். அப்பொழுது அவர் அவர்களுடைய சிந்தனையை அறிந்து கொண்டார். ஏனெனில் அவரே வார்த்தை. தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. ஆமென்! நான் தண்ணீர் பீச்சப்படுகிறதையும் இந்த சிறுவன் வருகிறதையும் காண்கிறேன். அவன் ஒரு புத்தகத்தை படித்து விட்டு நார்வே தேசத்து மொழியில் எழுதினான். அவனுக்குப் புரிந்து கொள்ளும் தன்மையுண்டு. யாரோ அவனிடம் பேசினார்கள். அவனுக்கு ஏதோ கோளாறு உள்ளது. அவன் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், கர்த்தராகிய இயேசு அவனை சுகப்படுத்துவார். ஒரு எளிய சிறுவன் வெகுதூரம் பயணம் செய்து இங்கு வந்து, நெருங்க முயல்கின்றான். இன்னும் சிறிது நேரத்தில் அவன் மேல் நாம் கைகளை வைத்து ஜெபிக்கலாம். 109நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? ஆமென்! எவ்வளவு அற்புதமானது! அந்த மகத்தான வைத்தியர் இப்பொழுது இங்கிருக்கிறார். சகோதரி... சகோதரி உங்கிரனும், பியானோ வாசிக்கும் அந்த சகோதரியும் எங்கே? நீங்கள் விரைவில் வந்து, 'அந்த மகத்தான வைத்தியர் இப்பொழுது அருகில் உள்ளார். அனுதாபம் கொள்ளும் இயேசு' என்னும் பாட்டை இசைக்க விரும்புகிறேன். ஜெபத்திற்காக இந்த வரிசையில் நின்று கொண்டிருப்பவர்கள் இந்தப் பக்கம் வரவும்; ஒரு நேரத்தில் ஒரு வரிசை மாத்திரம். சகோ. நெவில்! உங்களால் கூடுமானால், நீங்கள் அதைச் செய்யுங்கள். சகோ. காப்ஸ் எங்கே? அல்லது பாட்டுத் தலைவர்களில் ஒருவராகிலும் எங்கே? சகோ. உன்கிரன் எங்கிருக்கிறார்? அல்லது சகோ. காப்ஸ்? வேறு யாராகிலும் இங்கு வந்து இந்தப் பாட்டைத் தொடங்குங்கள். அந்த சகோதரர்கள் எல்லாம் எங்கே? சரி ஐயா, அது நல்லது. சரி, எல்லோரும் ஜெபத்தில் தரித்திருங்கள். 110பதறலை நினைவு கூருங்கள். பதறல் என்ன செய்யுமென்பதை பாருங்கள். பதறல் உங்களைக் கடல் தாண்டி வரச் செய்யும். பதறல் உங்களை ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு ஓடச்செய்யும். பதறல் எந்த இடத்திற்கும் உங்களைக் கொண்டு செல்லும். அருமையான ஒரு வயோதிப தகப்பனும் அவர் மகளும் பதறல் கொண்டு உள்ளே வர முயன்று, எப்படியோ இங்கு வந்து அமர்ந்தனர். நான் அங்கு வருவதற்கு சற்று முன்பு பரிசுத்த ஆவியானவர் அதை அவர்களுக்குத் தந்தருளினார். ஓ! இதுவரை பாடாத மிக இனிய பாட்டு இயேசு ஆசீர்வதிக்கப்பட்ட இயேசு. மகத்தான வைத்தியர் இப்பொழுது அருகில் உள்ளார் அனுதாபங்கொள்ளும் இயேசு. (சகோ பிரான்ஹாம் ஜெபிக்கிறார் - ஆசி) அவர் பேசி தளர்ந்த இதயத்திற்கு உற்சாக மூட்டுகிறார் ஓ, இயேசுவின் குரலைக் கேளுங்கள் சேராபீன் பாட்டிலே மிக இனிய இசை மரிக்க வேண்டிய நாவிலே இனி நாமம். ஓ, இதுவரை பாடாத மிக இனியப் பாட்டு (இப்பொழுது பதறல் கொண்டுள்ள ஒவ்வொருவரும், நீங்கள் சுகமடைவீர்கள் என்று உறுதி கொண்டிருக்கும்) ஒவ்வொருவரும்... சற்று யோசித்து பாருங்கள் எனக்குத் தெரிந்தவரை, கடந்த ஞாயிறன்று ஜெபிக்கப்பட்டவர்களில் 100 சதவிதம் இந்த வாரம் குணமடைந்துள்ளனர். அனுதாபங்கொள்ளும் இயேசு 111கவனியுங்கள் அவர் வருகிறார். பாருங்கள்? அவர் ஏற்கெனவே உங்களை சுகமாக்கிவிட்டார். அவர் தமது வார்த்தையைக் கொண்டு வருகிறார், அதை உறுதிப்படுத்துகிறார். அவருடைய பிரசன்னத்தைக் காண்பிக்கிறார். தேவனுக்குப் புறம்பேயுள்ள எவரும் இந்தக் காரியங்களைச் செய்யமுடியாது; அது உங்களுக்குத் தெரியும். அது மேசியாவின் அடையாளம். நான் மேசியாவல்ல என்று நீங்கள் அறிவீர்கள். அது அவர் எல்லாவற்றையும் உங்களுக்கு நிரூபித்துக் காண்பித்திருக்கிறார். அது உங்களைப் பதறல் கொள்ளச் செய்ய வேண்டும். அது இந்த இடத்தை மின்சாரம் பாய்வது போல் செய்ய வேண்டும் - வெடி மருந்து கொண்ட பீப்பாயில் ஒரு எரியும் தீக்குச்சியைப் போடுவது போல் நிச்சயமாக! அது உங்கள் விசுவாசத்தை வெடிக்கச் செய்ய வேண்டும் - அன்பும் பதறலும் ஜனங்களை தேவனுடைய ராஜ்யத்திற்குள் விரட்டியடித்து, அவர்களை முழு இருதயத்தோடும் விசுவாசிக்கச் செய்கின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் ஆமென் என்கிறார்கள் - ஆசி). சரி இப்பொழுது, பில்லி நீ... 112டோனி, என்னை ஒரு நிமிடம் பார். உன்னை அநேக நாட்களாக நான் காணவில்லை. ஆனால் நீ வியாதிப்பட்டிருக்கிறாய், நீ சீதபேதியினால் அவதியுறுகின்றாய். அது உண்மை. அது போய் விடும். அது உன்னை விட்டுவிலகும். அவன் இங்கு வந்தபோது, அது அவனைப் பின் தொடருகிறதைக் கண்டேன். தேவனுக்கு எதுவுமே இந்நேரத்தில் மறைவாக இருக்க முடியாது. எத்தனையோ நாட்கள் நான் டோனியைக் காணவில்லையென்று நினைக்கிறேன். சீதபேதி அவனைப் பீடித்திருப்பதைக் கண்டேன். அது அவனுக்குள் இருந்தது ஆனால் இப்பொழுது இல்லை. நாம் இப்பொழுது தலைகளை வணங்குவோம். ஒரு கண் கூட திறந்திருக்கக் கூடாது. நாம் எல்லோருமே ஜெபத்தில் தரித்திருப்போம். பில்லி பால் அல்லது சகோதரன் நெவில், சமயம் வரும் போது, அடுத்த வரிசையைக் கூப்பிடுவார். எல்லோரும் ஜெபித்துக் கொண்டிருங்கள். நாம் இப்பொழுது முயல்வோம்... நடு வரிசையை நான் கூப்பிடும்போது, அது நம் இடது பக்கத்தில் வரவேண்டும். அவ்வாறே இடது வரிசையும் - உங்களை அழைக்கும் போது இடது பக்கத்தில் வாருங்கள். சகோ. நெவில் உங்களை அழைப்பார். ஜனங்கள் வரிசையில் வரும் போது என்னுடன் சேர்ந்து அவர்கள் மேல் கைகளை வைத்து ஜெபிக்க விரும்பும் சகோதரர் யாராகிலும் உண்டா? ஊழியக்கார சகோதரர்களே, உங்களுக்கு விருப்பமிருந்தால், உங்களை நான் நிச்சயம் வரவேற்கிறேன். இது தனிப்பட்ட ஒருவரின் செயலல்ல. வியாதியஸ்தருக்கு ஜெபம் செய்ய என்னைப் போன்று உங்களுக்கும் உரிமையுண்டு. பரிசுத்த ஆவியானவர் இங்குள்ளார் என்று நானறிவேன். அதை யாராவது விசுவாசிக்காவிட்டால், அவர்களிடம் ஏதோ தவறுண்டு. 113சரி, நாம் முழு இருதயத்தோடும் விசுவாசிப்போமாக; அப்பொழுது கர்த்தர் நாம் கேட்கிறவைகளை அருளிச் செய்வார். விசுவாசியுங்கள், சந்தேகப்பட வேண்டாம். எல்லோரும் ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்யுங்கள். வேதம் என்ன சொல்கின்றது? ''உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்'' (யாக். 5:16). வரிசையில் வருபவர்களே, இந்த கைகள் உங்களைத் தொட்டவுடனே, நீங்கள் மகிழ்ச்சியுடன் இவ்விடம் விட்டுச் சென்று, நீங்கள் சுகமடைந்துவிட்டீர்கள் என்று தேவனை ஸ்தோத்திரியுங்கள். சரி, எல்லோரும் ஜெபத்தில் தரித்திருங்கள். சகோ. காப்ஸ் இப்பொழுது பாட்டைத் தொடங்குவார். கர்த்தராகிய இயேசுவே, எங்களுக்கு இப்பொழுது உதவி செய்யும். நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபத்தை ஏறெடுக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் தாமே ஒவ்வொருவரையும் தொடட்டும். நீர் கட்டளையிட்டபடி, நாங்கள் வியாதியஸ்தரின் மேல் கைகளை வைக்கும் போது, அவர்கள் சுகமடைவார்களாக! அவர்கள் சொஸ்தமாவார்கள் என்று நீர் வாக்கருளியிருக்கிறீர். பிதாவே, நாங்கள் அதை விசுவாசிக்கிறோம்; இயேசுவின் நாமத்தில். சரி, நாங்கள் ஜெபம் செய்யத் தொடங்கும் போது, எல்லோரும் ஜெபித்துக் கொண்டிருங்கள். முதலில் சக்கர வண்டியில் அமர்ந்திருக்கும் வியாதியுள்ள இந்த சிறுவன். 114(சகோ. பிரான்ஹாம் ஜெப வரிசையைத் தொடங்குகிறார் - ஆசி) இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் இந்தச் சிறுவன் சுகமடைய என் கரங்களை அவன் மீது வைக்கிறேன். ஆம், ஐயா இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்... (சகோ பிரான்ஹாமும் ஊழியக்காரரும் ஜெப வரிசையிலுள்ளவர்கள் மேல் கரங்களை வைக்கின்றனர். ஆனால் அந்த ஜெபங்கள் காதுகளில் கேட்க முடியாதபடி உள்ளன. சபையோர் ஜெபிக்கிறார்கள் - 'மகத்தான வைத்தியர்' என்ற பாடலை தொடர்ந்து பாடுகின்றனர் - ஆசி) இதுவரை பாடாத இனிமையான பாட்டு இயேசு, ஆசீர்வதிக்கப்பட்ட இயேசு 115நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தால், தேவன் உங்கள் வேண்டுகோளுக்கு பதிலளித்துவிட்டார் என்னும் உறுதியான நம்பிக்கையை, உங்களில் எத்தனை பேர் உங்கள் இருதயங்களில் கொண்டிருக்கிறீர்கள்? அது செய்து முடிந்துவிட்டது. அது முடிவு பெற்ற ஒரு கிரியை என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். இந்த வாரம் கவனித்துக் கொண்டே வாருங்கள். நீங்கள் மறுபடியும் வரும் போது, என்ன நிகழ்ந்துள்ளது என்பதைக் கவனியுங்கள். நான் அடுத்த முறை இங்கு வரும்போது, கர்த்தருக்கு சித்தமானால், அந்த அறைகளில் ஒன்றின் வழியாக - அந்த சிறிய அறையின் வழியாக - ஜெப வரிசையை நடத்திச் செல்லப் போகின்றேன். பாருங்கள்? அது இப்பொழுது வெளிப்படுகின்றது (பாருங்கள்?) அந்த நேரம்... ஜனங்களைக் கொண்டு வந்து, தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருடனும் சற்று நேரம் ஈடுபட்டு, தேடிக் கண்டு பிடித்து, இவ்விதம் சொல்ல விரும்புகிறேன். 116கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக! நீங்கள் இங்கு வந்ததற்காக மகிழ்ச்சியுறுகிறோம் - நீங்கள் பதறல் கொண்டிருக்கின்றீர்களா? சுகம் பெறுவதற்காக நீங்கள் கொண்டிருந்த பதறல் அனைத்தும், தேவன் வாக்களித்துள்ளதை நிறைவேற்றுவார் என்னும் திட நம்பிக்கை, விசுவாசம் அன்பு இவைகளினால் போய்விட்டதா? கர்த்தர் நிச்சயம் செய்வார். இங்கு சக்கர நாற்காலிகளில் இரண்டு மூன்று பிள்ளைகள் அமர்ந்திருக்கின்றனர்... அவர்களுக்காக நாம் இப்பொழுது விசுவாசிப்போம் (நிச்சயமாக!) அவர்களும் சுகம் பெறுவார்கள்; அவர்கள் சுகமடைவார்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் அல்லவா? ஆமென்! அவர்கள் சுகம் பெறுவார்கள். அவர் கண்டிப்பாக அதை செய்ய வேண்டும். தேவன் அவ்வாறு கூறியுள்ளார். நாம் பதறல் கொண்டு, அது நிறைவேறும் என்று இப்பொழுது விசுவாசிக்கப் போகின்றோம். 117நமது ஆராதனைகள் ஒன்று முடிந்து வேறொன்று தொடங்கவிருக்கிறது. போக வேண்டியவர்கள் போவதற்காக இப்பொழுது ஆராதனையை முடிக்கப் போகிறோம். இப்பொழுது பத்து மணி ஆக சுமார் எட்டு நிமிடங்கள் உள்ளன. நீங்கள் போக வேண்டுமானால் - நீங்கள் வந்ததற்காக நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். நீங்கள் மறுபடியும் வந்து எங்களுடன் இருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். மற்றவர்கள், நாம் நின்று கூட்டத்தை முடித்த பின்பு, மறுபடியும் உட்கார்ந்து கொள்ளுங்கள். போகிறவர்கள் கூடுமானவரை அமைதியாகச் செல்லுங்கள். இதன் பின்பு உடனே நாம் இராப்போஜன ஆராதனையை நடத்தப் போகின்றோம். உங்களால் கூடுமானால், அந்த ஆராதனையில் பங்குகொள்ள உங்களை அழைக்கிறோம். உங்களால் முடியாவிட்டால் - கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! எனக்காக ஜெபியுங்கள். நானும் உங்களுக்காக ஜெபிப்பேன். அடையாளத்தைத் தரித்துக் கொள்ள ஞாபகமிருக்கட்டும். தேவனுடைய ராஜ்யத்தில் பலவந்தமாக உள்ளே பிரவேசிக்கப் பதறல் கொண்டவர்களாயிருங்கள். கூட்டத்தை முடிக்க, ''இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல்“ என்னும் பாட்டை நின்றவாரே பாடுவோம். இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் துயரமும் துன்பமும் கொண்ட பிள்ளையே அது உனக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும் எங்கு சென்றிடினும் அதைக் கொண்டு செல். விலையுயர்ந்த நாமம், ஓ, என்னே இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், ஓ, என்னே இனிமை பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் நீங்கள் ஒருவரோடொருவர் கைகுலுக்கி, “என் யாத்திரீக சகோதரனே, சகோதரியே, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக!'' என்று கூறுங்கள் - ஆழமாக, உத்தமமாக, பக்தியாக... கிறிஸ்தவ நண்பர்களே, ஐக்கியங்கொள்ளும் நேரத்தில் ஒருவரோடொருவர் கை குலுக்குங்கள் - சகோதரர், சகோதரிகள். உங்கள் எல்லோரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக! மிகவும் அற்புதம். நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில் நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை இயேசுவின் பாதங்களில் நாம் சந்திக்கும் வரை நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை மீண்டும் சந்திக்கும் வரை, கர்த்தர் உம்முடன் இருப்பாராக! நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை இயேசுவின் பாதங்களில் நாம் சந்திக்கும் வரை நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை மீண்டும் சந்திக்கும் வரை, கர்த்தர் உம்முடன் இருப்பாராக! 118பரிசுத்த ஆவியானவராகிய தேவனுடைய அடையாளத்தின் கீழ் இனிதாக நாம் ஐக்கியங்கொண்டோம். நாம் மீண்டும் சந்திக்கும்வரை அவர்தாமே உங்களுடன் அபரிதமாக தங்கியிருப்பாராக! தேவனுடைய கிருபை உங்களுடன் சென்று, உங்களுக்கு முன்னால் உள்ள மரணப் பாதைகளைத் தகர்த்து, உங்கள் பாதைகளைத் தெளிவாக்கி, இயேசுவின் முகத்தை நீங்கள் கண்டு, அசையாமல் உறுதியாயிருக்க அருள் புரிவாராக! 119பரலோகப் பிதாவே, இந்த ஆராதனையையும் காலையில் நடைபெற்ற ஆராதனையையும் உமக்கென்று சமர்ப்பிக்கிறோம். இவைகளில் நேர்ந்த யாவற்றிற்கும் உமக்கே மகிமையைச் செலுத்துகிறோம். ஜனங்களை நீர் இரட்சித்ததற்காகவும் அவர்களை சுகமாக்கினதற்காகவும், நாங்கள் எதிர்நோக்கியிருந்த மகத்தான கிருபையை எங்களுக்குத் தந்தருளினதற்காகவும், உமக்கு நன்றியையும் துதிகளையும் ஏறெடுக்கிறோம். எங்களை இரட்சியும். இதற்காக உம்மை எவ்வளவாகத் துதிக்கிறோம்! நாங்கள் மீண்டும் சந்திக்கும் வரை எங்களுடன் இரும். இராப்போஜனத்தின் போது எங்களை நீர் சந்திக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். ஆண்டவரே, வாகனங்களை ஓட்டிக் கொண்டு வீடு செல்ல புறப்படுகிறவர்களின் சக்கரங்களின் மேல் நீர் இருக்கவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். துணிவாக (Reckless) விடுமுறைகளில் வாகனங்களை ஓட்டுபவர்களால் இவர்களுக்கு ஆபத்து ஒன்றும் நேரிடாதபடிக்கு இவர்களைக் காத்து வழி நடத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். (சகோ. பிரான்ஹாம் பியானோ வாசிப்பவருடன் பேசுகின்றார் - ஆசி). இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் துயரமும் துன்பமும் கொண்ட பிள்ளையே அது உனக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும் எங்கு சென்றிடினும் அதைக் கொண்டு செல். விலையுயர்ந்த நாமம், ஓ, என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், ஓ, என்ன இனிமை பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் இயேசுவின் நாமத்தில் முழங்காலை முடக்கி அவருடைய பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுவோம் பரலோகத்தில் ராஜாதி ராஜாவாய் அவருக்கு முடிசூடுவோம் நமது யாத்திரை முடிந்த பிறகு விலையுயர்ந்த நாமம், ஓ, என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், ஓ, என்ன இனிமை பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் 120நீங்கள் அமரும் முன்பாக ஆராதனைக்காக கூட்டம் அமைதலாகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில்... நான் தவறுதலாகக் கூறவில்லையென்றால், இவர்தான் நான் அண்மையில் ஆர்கன்சாசில் சந்தித்த சகோதரன் பிளேர் அல்லவா? நான் அப்படித்தான் நினைத்தேன். ஆயினும் நிச்சயமாக எனக்குத் தெரியவில்லை. இன்று காலை நடைபெற்ற குழந்தை பிரதிஷ்டைக்காக நீங்கள் இங்கு வந்திருந்தீர்கள். உங்களை நான் அண்மையில் ஆர்கன்சாசிலுள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்னுமிடத்தில் சந்தித்தேன் அல்லவா?ஆமாம். அப்பொழுது ஏதோ ஒன்று சம்பவிக்கவிருந்தது. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்தினார். அது சரிதானே? நல்லது. ''அந்த சகோதரன் தான் அது'' என்று நினைத்தேன். நீங்கள் இங்கு வந்திருப்பதினால் மகிழ்ச்சியுறுகிறேன். இப்பொழுது நடைபெறவிருக்கும் இராப்போஜனத்திற்கு நம்மை சுத்தம் செய்யும்படியாக ஜெபம் செய்ய, சகோதரன் பிளேரைக் கேட்டுக் கொள்ளப்போகிறேன். ஜெபம் செய்வீர்களா, சகோதரன் பிளேர் அவர்களே? (சகோ. பிளேர் ஜெபம் செய்கிறார் -ஆசி) ஆம், ஆம், கர்த்தாவே ஆண்டவரே அதை அருளும். ஆம் கர்த்தாவே, ஆம் கர்த்தாவே, ஆம் கர்த்தாவே, ஆம், ஆம், ஆம், ஆமென். 121ஆர்கன் வாசிக்கும் சகோதரியே, நாங்கள் இராப்போஜனத்தின் போது எப்பொழுதும் 'இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே' என்னும் பாட்டை ஆர்கனில் வாசிப்பது வழக்கம். சரி வேதபாகம்... இப்பொழுது நாம் சற்று அமைதியாக இருப்போம். (சகோ. பிரான்ஹாம் ஒரு சகோதரியிடம் பேசுகின்றார் - ஆசி) சரி, இப்பொழுது சகோ. நெவில் இராப்போஜனத்திற்காக ஒழுங்கைப் படிப்பார். அப்பொழுது உதவியாளர்கள் ஒவ்வொரு வரிசைக்கும், ஒவ்வொரு ஆசனத்திற்கும், இராப்போஜனத்தைக் கொண்டு வருவார்கள் - இங்கு அன்னியர்கள் இருந்தால், அவர்களுக்காக இதைக் கூறுகிறேன். 122இப்பொழுது நீங்கள் மெளனமாக தியானியுங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் பதறல் கொண்டு, அவசர அவரசமாக இதைப் புசித்தார்கள் என்று நினைவில் கொள்ளுங்கள். அவர்களுடைய நாற்பது வருட பிரயாணத்தின் முடிவில், பலவீனர் ஒருவரும் இல்லை. எனவே அது தெய்வீக சுகமளித்தலும் கூட, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! சகோ நெவில் (சகோ. நெவில் 1கொரி: 11: 23:32 வசனங்களைப் படிக்கிறார்- ஆசி). ''நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக் கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம் பண்ணின பின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து, இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. நீங்கள் இதைப் பானம் பண்ணும் போதெல்லாம் என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான் எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணக்கடவன். என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜன பானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். நாம் நியாயந்தீர்க்கப்படும் போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். (வாசித்த இந்த வசனங்களை கர்த்தர் தாமே ஆசீர்வதித்து தருவாராக. சகோ. பிரான்ஹாம் பிட்கப்பட்ட அப்பம் உள்ள தட்டை எடுக்கிறார் - ஆசி) 1கொரி. 12: 23-32. 123நான் சுருங்கின போன, பிட்கப்பட்ட இராப்போஜன அப்பத்தை என் கையில் பிடித்திருக்கிறேன். அது இயேசுகிறிஸ்துவின் சரீரத்திற்கு அடையாளமாயுள்ளது. இந்த கிழிக்கப்பட்ட திரையின் வழியாய் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நாம் பிரவேசிக்கலாம். எங்கள் பரலோகப் பிதாவே, நொறுக்கப்பட்டு கிழிக்கப்பட்ட உமது சரீரத்திற்கு அடையாளமாக இந்த அப்பம் உண்டாகப்பட்டது. இதை நாங்கள் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ளும் போது, நாங்களே இந்த செயலைப் புரிந்தது போல் இருக்கட்டும். எங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நாங்கள் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தைப் பெற்று, எங்கள் எதிர்கால வாழ்க்கை முழுவதிலும் - நாங்கள் இவ்வுலகில் வாழும் நாட்களிலெல்லாம் - உமது பிரசன்னத்தில் வாழ்ந்து, நித்திய காலமாக உம்மோடிருக்கும் கிருபையை எங்களுக்குத் தந்தருள்வீராக. இந்த அப்பத்தை, அதன் நோக்கத்திற்காக, ஆசீர்வதித்து தாரும். இயேசுவின் நாமத்தில் ஆமென்! 124சகோ. பிரான்ஹாம் திராட்ச ரச தட்டை எடுக்கிறார். “அவர் அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி அதைப் பிட்டார். அந்தப்படியே அவர் பாத்திரத்தை எடுத்து பானம் பண்ணி இது உங்களுக்காக சிந்தப்படுகிற புதிய உடன்படிக்கை யாகிய என் இரத்தமாயிருக்கிறது'' என்று கூறினதாக வேதம் உரைக்கிறது. இப்பொழுது நாம் ஜெபிக்கும்போது, கர்த்தர் தாமே தமது ஆசீர்வாதங்களை தந்தருள்வாராக! கர்த்தராகிய இயேசுவே, திராட்சையிலிருந்து பிழிந்த ரசத்தை என் கையில் பிடித்திருக்கிறேன். பிதாவே, எங்களைக் கழுவின அந்த விலையேறப் பெற்ற இரத்தத்திற்கு அது அறிகுறியாயுள்ளது. அதிலிருந்துதான் 'அடையாளம்' (Token) தோன்றினது. பிதாவே அதற்காகவும் இந்த அறிகுறிக்காகவும் நன்றி செலுத்துகிறேன். ''இதைப் புசித்து பானம் பண்ணுகிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. நான் அவர்களைக் கடைசி நாளில் எழுப்புவேன்'' என்று கூறியிருக்கிறீர். அந்த வாக்குத்தத்திற்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். பிதாவே, எங்கள் எல்லோருடைய இருதயங்களையும் ஒருமித்து சுத்திகரித்து எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விசுவாசத்திற்கு எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கும். நாங்கள் இதற்கு தகுதியற்றவர்கள். ஆனால் எங்கள் விசுவாசம் ஒருபோதும் தவறாது. நாங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை பூரணமாய் ஏற்றுக் கொள்கிறோம். பிதாவே, இதை எங்களுக்கு அருளும். இந்த திராட்சை ரசத்தை அதன் நோக்கத்திற்காக பரிசுத்தப்படுத்தும், இன்றிரவு இந்த திராட்சை ரசத்தைப் பானம்பண்ணி, அந்த அப்பத்தைப் புசிக்கும் எவரும். அவர்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ள பிரயாணத்தில் செல்வதற்கு பெலனையருளும். இயேசு வரும் வரைக்கும் அவர்கள் ஆரோக்கியமுள்ளவர்களாகவும் பலமுள்ளவர்களாகவும், பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டும் இருப்பார்களாக! ஆமென்.